பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தாய்லாந்து பிரதமருடன் பிரதமர் திரு மோடி சந்திப்பு

प्रविष्टि तिथि: 11 OCT 2024 12:41PM by PIB Chennai

2024, அக்டோபர் 11 அன்று, வியன்டியானில், கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டின் இடையே, தாய்லாந்து பிரதமர் திருமதி பெடோங்டார்ன் ஷினவத்ராவைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு பிரதமர்களும் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

தாய்லாந்து பிரதமராக பதவியேற்றதை முன்னிட்டு திருமதி பெடோங்டார்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். வரலாற்று சிறப்புடன் மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள பிரதமர் திரு மோடிக்கு திருமதி  ஷினவத்ரா வாழ்த்து தெரிவித்தார். பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். துணை மண்டல, பிராந்திய மற்றும் பலதரப்பு அரங்குகளில் நெருங்கிய ஒத்துழைப்பை உருவாக்குவதற்கான வழிகள் குறித்தும் அவர்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர். இந்தச் சூழலில், பிம்ஸ்டெக் மூலம் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் அவர்கள் விவாதித்தனர்.

தாய்லாந்துடனான இந்தியாவின் உறவுகளின் பத்தாண்டுகளை இந்த ஆண்டு குறிக்கும் நிலையில் இந்தியாவின் 'கிழக்கு நோக்கிய கொள்கை',  இந்தோ-பசிஃபிக் குறித்த இந்தியாவின் கண்ணோட்டம்  ஆகியவற்றின் முக்கிய தூணாக இந்த உறவு உள்ளது.

***

SMB/DL


(रिलीज़ आईडी: 2064189) आगंतुक पटल : 99
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam