பிரதமர் அலுவலகம்
                
                
                
                
                
                    
                    
                        திரு.ரத்தன் டாடா மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார் 
                    
                    
                        கல்வி, சுகாதாரம், துப்புரவு, விலங்குகள் நலன் போன்ற நோக்கங்களை முன்னெடுப்பதில் திரு டாடா முன்னணியில் இருந்தார்: பிரதமர்
பெரிய கனவுகளைக் காண்பதிலும், சமூகத்திற்குத் திருப்பித் தருவதிலும் திரு டாடாவின் பேரார்வம் தனித்துவமானது: பிரதமர்
                    
                
                
                    Posted On:
                10 OCT 2024 5:38AM by PIB Chennai
                
                
                
                
                
                
                திரு ரத்தன் டாடா மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு.டாடா,  தொலைநோக்குப் பார்வை கொண்ட வணிகத் தலைவர், இரக்கமுள்ள ஆன்மா, அசாதாரண மனிதர் என்றும், தனது பணிவு, கருணை, நமது சமூகத்தை மேம்படுத்துவதில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் பலருக்குத் தாமாகவே நேசமானவர் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது: 
"திரு ரத்தன் டாடா அவர்கள் தொலைநோக்குப் பார்வை  கொண்ட வணிகத் தலைவர், இரக்கமுள்ள ஆன்மா,   அசாதாரண மனிதர். இந்தியாவின் பழமையான, மிகவும் மதிப்புமிக்க வணிக நிறுவனங்களில் ஒன்றிற்கு நிலையான தலைமையை அவர் வழங்கினார். அதே நேரத்தில், அவரது பங்களிப்பு அலுவலக அறையைத்  தாண்டி வெகுதூரம் சென்றது. அவரது பணிவு, கருணை, நமது சமூகத்தை மேம்படுத்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் அவர் பலருக்குத் தாமாகவே நேசமானார். 
"திரு ரத்தன் டாடா அவர்களின் மிகவும் தனித்துவமான அம்சங்களில் ஒன்று, பெரிய கனவுகள் மற்றும் திருப்பித் தருவதில் அவரது ஆர்வம். கல்வி, சுகாதாரம், துப்புரவு, விலங்குகள் நலன் போன்றவற்றுக்கான பணிகளில் அவர் முன்னணியில் இருந்தார்.
"திரு ரத்தன் டாடா அவர்களுடனான எண்ணற்ற தொடர்புகளால் என் மனம் நிரம்பியுள்ளது. நான் குஜராத் முதலமைச்சராக இருந்தபோது அவரை அடிக்கடி சந்திப்பேன். பல்வேறு பிரச்சினைகள் குறித்து நாங்கள் கருத்துகளைப் பரிமாறிக் கொள்வோம். அவரது கண்ணோட்டங்கள் எனக்கு மிகவும் செழுமையாக இருந்தன. நான் தில்லிக்கு வந்த பிறகும் இந்தக் கலந்துரையாடல்கள் தொடர்ந்தன. அவரது மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அபிமானிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி."
******
(Release ID: 2063688)
SMB/KR
                
                
                
                
                
                (Release ID: 2063718)
                Visitor Counter : 69
                
                
                
                    
                
                
                    
                
                Read this release in: 
                
                        
                        
                            English 
                    
                        ,
                    
                        
                        
                            Urdu 
                    
                        ,
                    
                        
                        
                            हिन्दी 
                    
                        ,
                    
                        
                        
                            Marathi 
                    
                        ,
                    
                        
                        
                            Assamese 
                    
                        ,
                    
                        
                        
                            Bengali 
                    
                        ,
                    
                        
                        
                            Manipuri 
                    
                        ,
                    
                        
                        
                            Punjabi 
                    
                        ,
                    
                        
                        
                            Gujarati 
                    
                        ,
                    
                        
                        
                            Odia 
                    
                        ,
                    
                        
                        
                            Telugu 
                    
                        ,
                    
                        
                        
                            Kannada 
                    
                        ,
                    
                        
                        
                            Malayalam