உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவு துறை அமைச்சர் திரு அமித் ஷா, நாளை புதுதில்லியில் பிஎச்டி தொழில் வர்த்தக சபையின் 119-வது ஆண்டு அமர்வில் தலைமை விருந்தினராக உரையாற்றுகிறார்

Posted On: 09 OCT 2024 4:54PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா 2024 அக்டோபர் 10 வியாழக்கிழமை அன்று, புதுதில்லி விஞ்ஞான் பவனில் பிஎச்டி தொழில் வர்த்தக சபையின் 119-வது ஆண்டு அமர்வில் தலைமை விருந்தினராக உரையாற்றவுள்ளார். இந்த ஆண்டு அமர்வின் கருப்பொருள் “வளர்ச்சியடைந்த பாரதம்”@ 2047: முன்னேற்றத்தின் உச்சத்தை நோக்கி அணிவகுத்தல்' என்பதாகும்.

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்ற பிரதமர் திரு நரேந்திர மோடி உறுதி பூண்டுள்ளார். ஒட்டுமொத்த நாடும் அர்ப்பணிப்புடன் அந்த திசையில் விரைவாக முன்னேறி வருகிறது.

உலகின் முதல் 5 பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இணைந்துள்ளதுடன் பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் அது உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறுவதை நோக்கி நகர்ந்து வருகிறது.

தொழில்துறையைச் சேர்ந்த சுமார் 1500 வணிகர்கள், பட்டயக் கணக்காளர்கள், வங்கியாளர்கள், வழக்கறிஞர்கள் போன்றோர் 119-வது அமர்வில் பங்கேற்க உள்ளனர்.

*****

IR/RS/KR/DL



(Release ID: 2063558) Visitor Counter : 36