பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தில்லியில் தூய்மை நிகழ்வில் இளைஞர்களுடன் பிரதமர் நிகழ்த்திய கலந்துரையாடலின் தமிழாக்கம் 

Posted On: 02 OCT 2024 9:22PM by PIB Chennai

பிரதமர்: தூய்மையை பராமரிப்பதன் நன்மைகள் என்ன?

மாணவன்: ஐயா, இது நோய்களைத் தடுக்க உதவுகிறது, நாங்கள் எப்போதும் சுத்தமாக இருப்போம். மேலும், நம் நாடு சுத்தமாக இருந்தால், சுற்றுச்சூழலை நேர்த்தியாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பிரதமர்: கழிப்பறை இல்லை என்றால் என்ன நடக்கும்?

மாணவன்: ஐயா,  நோய்கள் பரவுகின்றன.

பிரதமர்: உண்மையில், நோய்கள் பரவுகின்றன. கடந்த காலத்தை சிந்தித்துப் பாருங்கள், கழிப்பறைகள் பற்றாக்குறையாக இருந்தபோது, 100 வீடுகளில் 60 வீடுகளில் கழிப்பறைகள் இல்லை. மக்கள் திறந்தவெளியில் மலம் கழிக்கச் செல்வார்கள், இது நோய்களுக்கு ஒரு முக்கிய காரணியாக மாறியது. பெண்கள், குறிப்பாக தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தூய்மை இந்தியா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து, பள்ளிகளில் மாணவிகளுக்கு தனி வசதிகளுடன் கழிப்பறைகள் கட்டப்படுவதை நாங்கள் முதலில் உறுதி செய்தோம். இதனால், மாணவிகளின் இடைநிற்றல் விகிதம் கணிசமாகக் குறைந்து, அவர்கள் தற்போது கல்வியைத் தொடர்கின்றனர். எனவே, தூய்மை நன்மை பயக்கும் என்று நிரூபிக்கப்படவில்லையா?

மாணவன்: ஆம் ஐயா.

பிரதமர்: யாருடைய பிறந்த நாளை நாம் இன்று கொண்டாடுகிறோம்?

மாணவர்: காந்திஜி, லால் பகதூர் சாஸ்திரி போன்றவர்கள், ஐயா.

பிரதமர்: சரி, உங்களில் யாராவது யோகா பயிற்சி செய்கிறீர்களா?... ஓ, அற்புதம், உங்களில் பலர் செய்கிறீர்கள். ஆசனங்கள் செய்வதால் என்னென்ன நன்மைகள்?

மாணவன்: ஐயா, இது நம் உடலை மிகவும் நெகிழ்வானதாக ஆக்குகிறது.

பிரதமர்: நெகிழ்வுத்தன்மை, மற்றும்?

மாணவர்: ஐயா, இது நோய்களைத் தடுக்க உதவுகிறது மற்றும் நல்ல ரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது.

பிரதமர்: நல்லது. இப்போது  வீட்டில் என்ன சாப்பிட பிடிக்கும்? உங்கள் அம்மா காய்கறிகளை சாப்பிடுங்கள், பால் குடியுங்கள் என்று  சொன்னால், உங்களில் எத்தனை பேர் அதை எதிர்க்கிறீர்கள் அல்லது விவாதிக்கிறீர்கள்?

மாணவன்: நாங்கள் எல்லா காய்கறிகளையும் சாப்பிடுகிறோம்.

பிரதமர்: பாகற்காய் உட்பட அனைத்து காய்கறிகளையும் எல்லோரும் சாப்பிடுகிறீர்களா?

மாணவன்: ஆம், பாகற்காய் தவிர.

பிரதமர்: ஆ, பாகற்காயைத் தவிர.

பிரதமர்: செல்வ மகள் சேமிப்புத் திட்டம் என்றால் என்ன தெரியுமா?

மாணவன்: தெரியும்  ஐயா.

பிரதமர்: என்ன அது?

மாணவி: ஐயா, இது உங்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு திட்டம், இது பல பெண்களுக்கு பயனளிக்கிறது. இந்த திட்டத்தின் கீழ் 10 வயது வரை கணக்கைத் தொடங்கலாம். எங்களுக்கு 18 வயதாகும்போது, அது எங்கள் கல்விக்கு மிகவும் உதவும். இந்த கணக்கிலிருந்து நாங்கள் பணத்தை எடுக்கலாம்.

பிரதமர்: சரியாகச் சொன்னீர்கள். ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் செல்வமகள் சேமிப்புக் கணக்கைத் தொடங்கலாம். பெற்றோர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ .1,000 டெபாசிட் செய்யலாம், இது மாதத்திற்கு சுமார் ரூ. 80-90-க்கு சமம். 18 ஆண்டுகளுக்குப் பிறகு, அவருக்கு உயர் கல்விக்குப் பணம் தேவைப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம் - அதற்காக பாதி தொகையை எடுக்க முடியும். மேலும், அவர் 21 வயதில் திருமணம் செய்து கொண்டால், அதற்காக பணத்தை திரும்பப் பெறலாம். ரூ.1,000 தவறாமல் டெபாசிட் செய்தால், திரும்பப் பெறும் போது, ரூ.50,000 பெறுவார், சுமார் ரூ.30,000-35,000 வட்டியுடன் பெறுவார். மகள்களுக்கான வட்டி விகிதம் 8.2%, இது சாதாரண விகிதத்தை விட அதிகம்.

மாணவர்: நாம் பள்ளியை சுத்தம் செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கும் ஒரு விளக்கப்படம் உள்ளது, மேலும் அது சுத்தம் செய்வதில் ஈடுபட்டுள்ள குழந்தைகளைக் காட்டுகிறது.

பிரதமர்: ஒருமுறை நான் குஜராத்தில் இருந்தேன். அப்போது ஒரு பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குறிப்பிடத்தக்க ஒன்றைச் செய்தார். பாடசாலை ஒரு கடற்கரைப் பகுதியில் அமைந்திருந்தது, அங்கு தண்ணீர் உப்புத்தன்மையுடன் இருந்தது,  மரங்களோ அல்லது பசுமையோ இல்லாமல் நிலம் தரிசாக இருந்தது. ஆசிரியர் என்ன செய்தார்? அவர் ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு காலி  பாட்டிலைக் கொடுத்தார்.அவர் சுத்தம் செய்த எண்ணெய் கேன்களைப் பயன்படுத்தினார். தாய்மார்கள் சாப்பிட்ட பிறகு பாத்திரம் கழுவ பயன்படுத்தும் தண்ணீரை சேகரித்து அந்த பாட்டில்களில் பள்ளிக்கு கொண்டு வருமாறு குழந்தைகளிடம் கூறினார். ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு மரக்கன்றைக் கொடுத்து, அவர்கள் வீட்டிலிருந்து கொண்டு வரும் தண்ணீரை தங்கள் மரக்கன்றை வளர்க்கப் பயன்படுத்தப்படும்படி  கூறினார். 5-6 ஆண்டுகளுக்குப் பிறகு நான் பள்ளிக்குச் சென்றபோது, முழு பள்ளியும் யாரும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பசுமையால் செழித்திருந்தது.

மாணவன்: இது உலர் கழிவு. உலர்ந்த மற்றும் ஈரமான கழிவுகளை இப்படி பிரித்தால், அது உரம் தயாரிக்க உதவுகிறது.

பிரதமர்: அப்படியானால் நீங்கள் அனைவரும் இந்த நடைமுறையை வீட்டில் பின்பற்றுகிறீர்களா?

பிரதமர்: உங்கள் அம்மா காய்கறிகள் மற்றும் இலைகளை வெறுங்கையுடன் வாங்கச் செல்லும்போது, அவற்றை பிளாஸ்டிக் பையில் கொண்டு வருவார்களா? உங்களில் யாராவது அவளுடன் வாக்குவாதம் செய்கிறீர்களா, "அம்மா, வீட்டிலிருந்து ஒரு பையை எடுத்துச் செல்லுங்கள். பிளாஸ்டிக்கை ஏன் வீட்டிற்கு கொண்டு வருகிறீர்கள்? ஏன் இப்படி குப்பைகளை வீட்டிற்குள்  கொண்டு வரவேண்டும்?" உங்களில் யாராவது அவர்களுக்கு இதை நினைவூட்டுகிறீர்களா?

மாணவன்: ஆம், துணிப்  பைகளை  எடுத்துச் செல்ல நாங்கள் அவர்களை ஊக்குவிக்கிறோம், ஐயா.

பிரதமர்: அப்போ, நீங்க சொல்கிறீர்களா?

மாணவன்: ஆம் ஐயா.

பிரதமர்: அப்படியானால் சரி.

பிரதமர்: என்ன இது?  காந்திஜியின் கண்ணாடி, நீங்கள் தூய்மையை பராமரிக்கிறீர்களா இல்லையா என்பதை காந்திஜி கவனிக்கிறார் என்று நினைக்கிறீர்களா? காந்திஜி தனது வாழ்நாள் முழுவதையும் தூய்மைக்காக அர்ப்பணித்தார் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். யார் சுத்தமாக வைத்திருக்கிறார்கள், யார் சுத்தமாக வைக்கவில்லை என்பதை அவர் எப்பொழுதும் கவனித்துக் கொண்டே இருக்கிறார். சுதந்திரம் அல்லது தூய்மை ஆகிய இரண்டில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டி வந்தால், தான் தூய்மையைத் தேர்ந்தெடுப்பேன் என்று அவர் ஒருமுறை கூறினார். சுதந்திரத்தையும் தாண்டி அவர் தூய்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார் என்பதை இது காட்டுகிறது. இப்போது சொல்லுங்கள், தூய்மை இயக்கத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா வேண்டாமா?

மாணவன்: ஆம் ஐயா, நாம் அதை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

பிரதமர்: அப்படியானால், தூய்மை என்பது வெறும் திட்டமாக மட்டும் இருக்க வேண்டுமா  அல்லது அது ஒரு பழக்கமாக மாற வேண்டுமா?

மாணவன்: அது ஒரு பழக்கமாக மாற வேண்டும்.

பிரதமர்: நல்லது. இந்தத் தூய்மை இயக்கம் மோடியின் திட்டம் என்று சிலர் நம்புகிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால், தூய்மை என்பது ஒரு நாள் பணி அல்ல, இது ஒரு நபர் அல்லது ஒரு குடும்பத்தின் பொறுப்பு அல்ல. இது ஒரு வாழ்நாள் அர்ப்பணிப்பு - வருடத்தில் 365 நாட்கள், நாம் வாழும் வரை. இதற்கு நமக்கு என்ன தேவை? நமக்கு ஒரு மனநிலை, ஒரு மந்திரம் தேவை. நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் குப்பைகளை உருவாக்க வேண்டாம் என்று முடிவு செய்தால் கற்பனை செய்து பாருங்கள். என்ன நடக்கும்?

மாணவன்: அப்படியானால் தூய்மை நிலைநாட்டப்படும்.

பிரதமர்: சரியாகச் சொன்னீர்கள். எனவே, இப்போது நீங்கள் என்ன பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்? குப்பை போடாமல் இருக்கும் பழக்கம் - இது முதல் படி. புரிந்ததா?

மாணவன்: ஆம் ஐயா.

**************** 

SMB/KV
 



(Release ID: 2062645) Visitor Counter : 5