பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
20 மாநிலங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து ஆதரவு மையங்கள் காணொலிக் காட்சி மூலம் ராஞ்சியில் தொடங்கப்பட்டன
Posted On:
30 SEP 2024 3:32PM by PIB Chennai
7-வது தேசிய ஊட்டச்சத்து மாதம் 2024-ன் நிறைவு விழா ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் குமார் கங்வார், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி முன்னிலையில் நடைபெற்றது.
ஒரு மாத கால கொண்டாட்டங்களின் போது ,நாடு முழுவதும் நடந்த பல்வேறு வெகுஜன உணர்திறன் முயற்சிகளை நிரூபிக்கும் ஊட்டச்சத்து மாதம் பற்றிய படம் பார்வையாளர்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, குழந்தைகள், வளரிளம் பெண்கள், கர்ப்பிணி, பாலூட்டும் தாய்மார்களிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வை மேம்படுத்துவதற்கான ஜார்க்கண்டின் வாழ்க்கை சுழற்சி அணுகுமுறையை எடுத்துக்காட்டுகின்ற ஊக்கமளிக்கும் குறும்படம் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக இன்று நாட்டின் 20 மாநிலங்களில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி மையங்கள் தொடங்கி வைக்கப்பட்டன.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தனது உரையில், ஊட்டச்சத்து மாதத்தில் பல்வேறு ஊட்டச்சத்து தொடர்பான கருப்பொருள்களில் 13.95 லட்சம் அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 12.86 கோடி விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன என்று கூறினார்.
ஜார்க்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்வார் தனது முக்கிய உரையில், ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்க அனைத்து துறைகள் மற்றும் இதர பங்குதாரர்களிடையே ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை பார்வையாளர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தார்.
ஊட்டச்சத்து மாதம் 2024 ஆரோக்கியமான மற்றும் ஊட்டமளிக்கப்பட்ட இந்தியாவை நோக்கி பல்வேறு பங்குதாரர்களின் கூட்டு முயற்சிகளைக் கொண்டாடுகிறது. இது பங்கேற்கும் அனைத்து மாநிலங்களின் அர்ப்பணிப்பை அங்கீகரிப்பதோடு மேம்படுத்தப்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூலம் பங்குதாரர்களுக்கு சிறந்த அனுபவத்தை உறுதி செய்யும்.
---
(Release ID 2060268)
SRI/LKS/KPG/RR
(Release ID: 2060326)
Visitor Counter : 44