பிரதமர் அலுவலகம்
இயற்கை விவசாயி திருமதி பாப்பாம்மாள் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
प्रविष्टि तिथि:
28 SEP 2024 7:35AM by PIB Chennai
இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ விருது பெற்ற திருமதி பாப்பம்மாள் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். விவசாயத்தில், குறிப்பாக இயற்கை வேளாண்மையில் அவர் முத்திரை பதித்துள்ளார் என்று திரு மோடி கூறியுள்ளார். அவரது பணிவு மற்றும் கனிவான குணத்திற்காக மக்கள் அவரைப் பாராட்டினர் என்று பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
"பாப்பம்மாள் அவர்களின் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்தில், குறிப்பாக இயற்கை விவசாயத்தில் அவர் முத்திரை பதித்தார். அவரது பணிவு மற்றும் கனிவான இயல்புக்காக மக்கள் அவரைப் பாராட்டினர். எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் நலம் விரும்பிகளுடன் உள்ளன. ஓம் சாந்தி.".
*****
PKV/ KV
(रिलीज़ आईडी: 2059793)
आगंतुक पटल : 112
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam