சுற்றுலா அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி-2024-ல் வெற்றி பெற்ற கிராமங்களை சுற்றுலா அமைச்சகம் அறிவித்துள்ளது 
                    
                    
                        
தமிழ்நாட்டின் கீழடி, மேல்கலிங்கம்பட்டி கிராமங்களுக்கு விருது 
                    
                
                
                    Posted On:
                27 SEP 2024 2:38PM by PIB Chennai
                
                
                
                
                
                
                உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இன்று (27.09.2024) சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2024-ல் வெற்றி பெற்ற கிராமங்களை மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகம் அறிவித்தது.
 
இந்தியாவின் ஆன்மாவான கிராமங்களில் சுற்றுலாவை மேம்படுத்த, சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டி 2023-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. சமூக அடிப்படையிலான மதிப்புகள், அனைத்து அம்சங்களிலும் நிலைத்தன்மைக்கான அர்ப்பணிப்பு, கலாச்சாரம், இயற்கை வளங்களைப் பாதுகாத்து ஊக்குவிக்கும் கிராமங்களை அடையாளம் கண்டு அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
 
2023-ம் ஆண்டில் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் முதல் பதிப்பில் 795 கிராமங்களிலிருந்து விண்ணப்பங்கள் வந்தன. சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியின் இரண்டாவது ஆண்டில், 30 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலிருந்து மொத்தம் 991 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 8 பிரிவுகளின் 36 கிராமங்கள் சிறந்த சுற்றுலா கிராமங்கள் போட்டியில் வெற்றியாளர்களாக அங்கீகரிக்கப்பட்டன.
 
இந்த 36 பின்வருமாறு:
	
		
			| வஎண்
 | பெயர் | மாநிலம் / யூனியன் பிரதேசம் | வகை | 
	
	
		
			| 1 | துத்மராஸ் | சத்தீஸ்கர் | சாகச சுற்றுலா | 
		
			| 2 | அரு | ஜம்மு & காஷ்மீர் | சாகச சுற்றுலா | 
		
			| 3 | குத்தலூர் | கர்நாடக | சாகச சுற்றுலா | 
		
			| 4 | யாக்கோல் | உத்தரகண்ட் | சாகச சுற்றுலா | 
		
			| 6 | குமரகம் | கேரளா | வேளாண் சுற்றுலா | 
		
			| 7 | கார்டே | மகாராஷ்டிரா | வேளாண் சுற்றுலா | 
		
			| 8 | ஹன்சாலி | பஞ்சாப் | வேளாண் சுற்றுலா | 
		
			| 9 | சூபி | உத்தரகண்ட் | வேளாண் சுற்றுலா | 
		
			| 5 | பராநகர் | மேற்கு வங்காளம் | வேளாண் சுற்றுலா | 
		
			| 10 | சித்ரகோட் | சத்தீஸ்கர் | சமுதாயம் சார்ந்த சுற்றுலா | 
		
			| 11 | மினிக்காய் தீவு | லட்சத்தீவு | சமுதாயம் சார்ந்த சுற்றுலா | 
		
			| 12 | சியால்சுக் | மிசோரம் | சமுதாயம் சார்ந்த சுற்றுலா | 
		
			| 14 | தியோமாலி | ராஜஸ்தான் | சமுதாயம் சார்ந்த சுற்றுலா | 
		
			| 13 | அல்பனா கிராம் | திரிபுரா | சமுதாயம் சார்ந்த சுற்றுலா | 
		
			| 15 | சுவால்குச்சி | அசாம் | கலை | 
		
			| 17 | பிரான்பூர் | மத்தியப் பிரதேசம் | கலை | 
		
			| 18 | உம்டன் | மேகாலயா | கலை | 
		
			| 16 | மணியபந்தா | ஒடிசா | கலை | 
		
			| 19 | நிர்மல் | தெலுங்கானா | கலை | 
		
			| 20 | ஹஃபேஸ்வர் | குஜராத் | பாரம்பரியம் | 
		
			| 21 | ஆண்ட்ரோ | மணிப்பூர் | பாரம்பரியம் | 
		
			| 22 | மாவ்ப்லாங் | மேகாலயா | பாரம்பரியம் | 
		
			| 23 | கீழடி | தமிழ்நாடு | பாரம்பரியம் | 
		
			| 24 | புரா மஹாதேவ் | உத்தரப் பிரதேசம் | பாரம்பரியம் | 
		
			| 25 | துதானி | தாத்ரா மற்றும் நகர் ஹவேலி மற்றும் டாமன் மற்றும் டையூ | பொறுப்பான சுற்றுலா | 
		
			| 26 | கடலுண்டி | கேரளா | பொறுப்பான சுற்றுலா | 
		
			| 27 | தார் கிராமம் | லடாக் | பொறுப்பான சுற்றுலா | 
		
			| 28 | சபர்வாணி | மத்தியப் பிரதேசம் | பொறுப்பான சுற்றுலா | 
		
			| 29 | லாட்புரா காஸ் | மத்தியப் பிரதேசம் | பொறுப்பான சுற்றுலா | 
		
			| 34 | அஹோபிலம் | ஆந்திரப் பிரதேசம் | ஆன்மீக மற்றும் ஆரோக்கியம் | 
		
			| 30 | பண்டோரா | கோவா | ஆன்மீக மற்றும் ஆரோக்கியம் | 
		
			| 31 | ரிக்கியபீடம் | ஜார்கண்ட் | ஆன்மீக மற்றும் ஆரோக்கியம் | 
		
			| 32 | மேல்கலிங்கம் பட்டி | தமிழ்நாடு | ஆன்மீக மற்றும் ஆரோக்கியம் | 
		
			| 33 | சோமசீலா | தெலுங்கானா | ஆன்மீக மற்றும் ஆரோக்கியம் | 
		
			| 35 | ஹர்சில் | உத்தரகண்ட் | துடிப்பான கிராமம் | 
		
			| 36 | குஞ்சி | உத்தரகண்ட் | துடிப்பான கிராமம் | 
	
****
(Release ID: 2059419)
PLM/KPG/KR
                
                
                
                
                
                (Release ID: 2059568)
                Visitor Counter : 121