பிரதமர் அலுவலகம்
உக்ரைன் அதிபருடன் பிரதமர் சந்திப்பு
Posted On:
24 SEP 2024 4:34AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 2024 செப்டம்பர் 23 அன்று நியூயார்க்கில் எதிர்கால உச்சிமாநாட்டிற்கு இடையே, உக்ரைன் அதிபர் மேதகு திரு வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.
பிரதமர் திரு. நரேந்திர மோடி அண்மையில் உக்ரைனுக்கு மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்ந்த இரு தலைவர்களும், இருதரப்பு உறவுகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படுவது குறித்து திருப்தி தெரிவித்தனர். உக்ரைனின் நிலைமை மற்றும் அமைதிக்கான பாதையைப் பின்பற்றுவதற்கான முன்னோக்கிய பாதை ஆகியவையும் அவர்களின் விவாதங்களில் முக்கியமாக இடம்பெற்றன.
ராஜதந்திரம், பேச்சுவார்த்தை மற்றும் அனைத்து தரப்பினருக்கும் இடையேயான ஈடுபாடு ஆகியவற்றின் மூலம் மோதலுக்கு அமைதியான தீர்வு காண இந்தியாவின் தெளிவான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மோதலுக்கு நீடித்த மற்றும் அமைதியான தீர்வை ஏற்படுத்துவதற்கு அனைத்து ஆதரவையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மூன்று மாதங்களில் இரு தலைவர்களுக்கும் இடையிலான மூன்றாவது சந்திப்பு இதுவாகும். இரு தலைவர்களும் நெருங்கிய தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.
***
(Release ID: 2058086)
PKV/RR/KR
(Release ID: 2058114)
Visitor Counter : 121
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam