தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்க தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் தயாராகி வருகிறது
Posted On:
19 SEP 2024 9:31AM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தூய்மையை நிறுவனமயமாக்குதல், அரசில் நிலுவையைக் குறைத்தல் என்னும் தொலைநோக்குப் பார்வையால் ஈர்க்கப்பட்டு, தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் அதன் கள அலுவலகங்களுடன் இணைந்துஅக்டோபர் அக்டோபர் 2 முதல் 31 வரை சிறப்பு பிரச்சாரம் 4.0-ல் பங்கேற்க தயாராகி வருகிறது. நிலுவையில் உள்ளவற்றை அப்புறப்படுத்துதல், சிறந்த இட மேலாண்மை மற்றும் பல்வேறு தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, செப்டம்பர் 6 அன்று அனைத்து ஊடகத் தலைவர்களுடன் நிலுவையில் உள்ள விஷயங்களைத் தீர்ப்பதற்கான சிறப்பு பிரச்சாரம் 4.0 மற்றும் தூய்மையை செயல்படுத்துவதற்கான தயாரிப்பு முன்னேற்றம் குறித்து ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.
சிறப்பு முகாம் 3.0
தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் சிறப்பு பிரச்சாரம் 3.0 இல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மொத்தம் 1013 வெளி முகாம்கள் நடத்தப்பட்டு, 1972 இடங்கள் கண்டறியப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. 28,574 கோப்புகள் நீக்கப்பட்டன. 2.01 லட்சம் கிலோ பழைய கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு ரூ.3.62 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. CPGRAMS இன் கீழ் பொதுமக்கள் குறைதீர்ப்புகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு மேல்முறையீடுகள் மற்றும் இதர சாதனைகளை தீர்ப்பதில் அமைச்சகம் 100% இலக்கை எட்டியது.
நவம்பர் 2023 முதல் ஆகஸ்ட் 2024 வரை சாதனைகள்
இந்தக் காலகட்டத்தில், தூய்மையை நிறுவனமயமாக்குதல் மற்றும் நிலுவையில் உள்ள விஷயங்களை முடித்தல் போன்ற அதே வேகத்தை பராமரிக்க அமைச்சகம் தொடர்ந்து பாடுபட்டது.
இந்தக் காலகட்டத்தில் முக்கிய சாதனைகள் பின்வருமாறு:
- கழிவுகளை அகற்றுவதன் மூலம் கிடைத்த வருவாய் ரூ.1.76 கோடி
- 1.47 இலட்சம் கிலோ கழிவுகள் அகற்றப்பட்டது
- 18,520 பிசிக்கல் கோப்புகள் களையெடுக்கப்பட்டன
- 110 வாகனங்கள் பறிமுதல்
- 2,422 இடங்கள் சுத்தம் செய்யப்பட்டன
- 33,546 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டது
- மொத்தம்1,345 வெளிப்புற முகாம்கள் நடத்தப்பட்டன
- 3,044 பொதுமக்கள் குறைகள் தீர்க்கப்பட்டு, 737 மேல்முறையீட்டு மனுக்கள் தீர்வு செய்யப்பட்டுள்ளன
***
(Release ID: 2056459)
PKV/RR/KR
(Release ID: 2056517)
Visitor Counter : 43
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam