பிரதமர் அலுவலகம்
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் மற்றும் துணை அதிபருக்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்
Posted On:
17 SEP 2024 8:59PM by PIB Chennai
பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.
குடியரசு தலைவருக்கு அனுப்பிய பதிலில் பிரதமர் கூறியிருப்பதாவது;
"மாண்புமிகு குடியரசுத் தலைவர் அவர்களே, உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி! தற்சார்பு மற்றும் வளர்ந்த இந்தியாவின் தீர்மானத்தை நனவாக்க உங்களது எழுச்சியூட்டும் வழிகாட்டுதல் மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது. நாட்டிற்கும் நம் நாட்டு மக்களுக்கும் எங்கள் பொறுப்புகளை நிறைவேற்றுவதில் நாங்கள் எந்த வாய்ப்பையும் விட்டுவிடமாட்டோம்.
குடியரசு துணைத் தலைவருக்கு பிரதமர் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது;
"உங்கள் வாழ்த்துக்களுக்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன், ஜக்தீப் தங்கர் அவர்களே. பல்வேறு பிரச்சினைகள் குறித்த உங்கள் வழிகாட்டுதலையும் நுண்ணறிவையும் நான் மதிக்கிறேன்.
தமது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட ஒவ்வொருவருக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். எனக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அன்பு, மக்களுக்காக தொடர்ந்து கடுமையாக உழைக்க எனக்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது.
பிரதமர் தமது சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது;
"மக்களின் இவ்வளவு அரவணைப்பை தாழ்மையுடனும், கவுரவத்துடன் ஏற்றுக் கொள்கிறேன்.
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. இந்த அன்பு, மக்களுக்காக தொடர்ந்து கடுமையாக உழைக்க எனக்கு மிகுந்த பலத்தை அளிக்கிறது.
எங்கள் மூன்றாவது பதவிக்காலம் 100 நாட்களை நிறைவு செய்யும் நேரமும் இதுதான். கடந்த 100 நாட்களை நினைவுபடுத்தும் வகையில் மக்கள் நலன் சார்ந்த மற்றும் வளர்ச்சி சார்ந்த முடிவுகள் எடுக்கப்பட்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இது வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் நமது நோக்கத்திற்கு வலு சேர்க்கும்.
இன்று சமூக சேவை முயற்சிகளில் பலர் பங்கேற்றுள்ளனர். அவர்களின் உணர்வுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன், இந்த முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
***
(Release ID: 2055817)
(Release ID: 2055882)
Visitor Counter : 51
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam