மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

பொதுப் போக்குவரத்து ஆணையங்கள் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கான PM-eBus சேவா – கட்டண பாதுகாப்பு நடைமுறை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 11 SEP 2024 8:13PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பொதுப் போக்குவரத்து ஆணையங்கள் மூலம் மின்சாரப் பேருந்துகளை கொள்முதல் செய்து இயக்குவதற்கான "PM-eBus சேவை பாதுகாப்பு வழிமுறை (PSM) திட்டத்திற்கு ரூ.3,435.33 கோடி ஒதுக்கீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டது .

இந்தத் திட்டம், 2024-25 நிதியாண்டு முதல் 2028-29 நிதியாண்டு வரை 38,000 க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகளை (-பேருந்துகள்) பணியில் ஈடுபடுத்த உதவும். இந்த திட்டம் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து 12 ஆண்டுகள் வரை மின்-பேருந்துகளின் செயல்பாட்டை ஆதரிக்கும்.

தற்போது, அரசுப் போக்குவரத்து நிறுவனங்களால் (பி.டி.) இயக்கப்படும் பெரும்பாலான பேருந்துகள், டீசல் / சி.என்.ஜி.யில் இயங்குகின்றன, இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. மறுபுறம், மின்-பேருந்துகள் சுற்றுச்சூழலுக்கு உகந்தவை என்பதோடு குறைந்த செயல்பாட்டு செலவைக் கொண்டுள்ளன. எவ்வாறாயினும், மின்-பேருந்துகளின் அதிக முன்பணம் மற்றும் செயல்பாடுகளிலிருந்து, குறைந்த வருவாய் ஈட்டப்படுவதால் அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் (பி.டி.) மின்-பேருந்துகளை வாங்கி இயக்குவது சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மின்சாரப் பேருந்துகளின் அதிக மூலதனச் செலவை ஈடுகட்டும் பொருட்டு, அரசுப் போக்குவரத்து அதிகாரிகள் (பி.டி.) இப்பேருந்துகளை மொத்த செலவு ஒப்பந்த (ஜி.சி.சி) மாதிரியில் பொது மற்றும் தனியார் கூட்டு முயற்சியின் மூலம், இப்பேருந்துகளை இயக்குகின்றனர். ஜி.சி.சி மாதிரியின் கீழ் பி.டி.ஏக்கள் பேருந்தின் முன்கூட்டிய செலவை செலுத்த தேவையில்லை, அதற்கு பதிலாக ..எம் / ஆபரேட்டர்கள் மாதாந்திர கட்டணங்களுடன் பி.டி.ஏக்களுக்கான மின்-பேருந்துகளை வாங்கி இயக்குகிறார்கள். இருப்பினும், OEMகள் / ஆபரேட்டர்கள் சாத்தியமான கட்டண இயல்பு நிலைகள் பற்றிய கவலைகள் காரணமாக, இந்த மாதிரியில் ஈடுபட தயங்குகிறார்கள்.

ஒரு பிரத்யேக நிதி மூலம் OEMகள் / ஆபரேட்டர்களுக்கு சரியான நேரத்தில் பணம் செலுத்துவதை உறுதி செய்வதன் மூலம், இந்த கவலையை இந்த திட்டம் நிவர்த்தி செய்கிறது. அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் பணம் செலுத்தத் தவறினால், திட்ட நிதியிலிருந்து CESL, தேவையான பணம்செலுத்தல்களைச் செய்யும், இது பின்னர் அரசுப் போக்குவரத்து நிறுவனங்கள் / மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களால் ஈடுசெய்யப்படும்.

தனியார் துறை பங்களிப்பை ஊக்குவிப்பதன் மூலம் மின்-பேருந்துகளை ஏற்றுக்கொள்வதை எளிதாக்க இந்த முயற்சி முயல்கிறது. இந்த திட்டம் பசுமை இல்ல வாயு உமிழ்வை கணிசமாகக் குறைக்கவும், புதைபடிம எரிபொருள் நுகர்வைக் குறைக்கவும் வழிவகுக்கும். இந்தத் திட்டத்தைத் தேர்ந்தெடுக்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் இருக்கும் அனைத்து அரசுப் போக்குவரத்து அதிகாரிகளுக்கும் (PTAs) இந்தத் திட்டம் பலன்களை வழங்கும்.

***

MM/RR/KV


(Release ID: 2054087) Visitor Counter : 57