குடியரசுத் தலைவர் செயலகம்
அமிர்தத் தோட்டத்தில் ஆசிரியர்களுக்கு நாளை பிரத்யேக அனுமதி
Posted On:
04 SEP 2024 5:42PM by PIB Chennai
ஆசிரியர் தினமான நாளை (2024 செப்டம்பர் 5) அமிர்தத் தோட்டத்தில் நாளை ஆசிரியர்கள் பிரத்தியேகமாக அனுமதிக்கப்படுவார்கள். ஆசிரியர்கள், வடக்கு அவென்யூ சாலைக்கு அருகிலுள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் 35-வது நுழைவு வாயிலில் இருந்து செல்லலாம். மத்திய செயலக மெட்ரோ நிலையத்திலிருந்து 35-ம் எண் நுழைவு வாயில் வரை இலவச பேருந்து சேவையும் அவர்களின் வசதிக்காக ஏற்பாடு செய்யப்படும்.
அம்ரித் உத்யன் எனப்படும் அமிர்தத் தோட்டத்தைப் பார்வையிட கோடைகால அனுமதியாக, இந்த ஆண்டில் 2024 ஆகஸ்ட் 16 முதல் 2024 செப்டம்பர் 15 வரை பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைகளைத் தவிர மற்ற நாட்களில் காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை இது பொதுமக்களுக்காகத் திறந்திருக்கும்.
இதைப் பார்வையிட அனுமதி இலவசம். பார்வையாளர்கள், குடியரசுத் தலைவர் மாளிகையின் இணையதளமான https://visit.rashtrapatibhavan.gov.in/ என்ற தளத்தின் மூலம் அமிர்தத் தோட்டத்தைப் பார்வையிட முன்பதிவு செய்யலாம். நுழைவு வாயில் எண் 35-க்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சுய சேவை மையங்கள் மூலமாகவும் பார்வையாளர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இந்த ஆண்டு கோடைகால அனுமதியின்போது தற்போதுவரை 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் அமிர்தத் தோட்டத்தைப் பார்வையிட்டுள்ளனர்.
----
PLM/KPG/DL
(Release ID: 2051864)