பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

தங்கப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் வீரர் நிதேஷ் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து

Posted On: 02 SEP 2024 8:16PM by PIB Chennai

பிரான்ஸில் நடைபெற்று வரும் பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் பாரா பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்எல் 3 போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நிதேஷ் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

பாரா பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் எஸ்.எல்.3 பிரிவில் நிதேஷ் குமார் தங்கம் வென்றது மிகப்பெரிய சாதனை. அவர் வியத்தகு திறமை மற்றும் விடாமுயற்சிக்காக அறியப்படுகிறார். அவர் வளர்ந்து வரும் விளையாட்டு வீரர்களை தொடர்ந்து ஊக்குவிக்கட்டும். @niteshnk11

#Cheer4Bharat"

***

(Release ID: 2051036)

MM/AG/KR

 


(Release ID: 2051696) Visitor Counter : 43