பிரதமர் அலுவலகம்
பாரீஸ் பாராலிம்பிக்ஸ் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற ஷீத்தல் தேவி, ராகேஷ் குமார் ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
02 SEP 2024 11:40PM by PIB Chennai
தற்போது நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகளில் கலப்பு அணி சுற்று வில்வித்தை போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றதன் மூலம் ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோர் வெளிப்படுத்திய குழு உணர்வை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளதாவது:
"டீம் வொர்க் வெற்றி!
கலப்பு அணி காம்பவுண்ட் ஓபன் வில்வித்தையில் வெண்கலம் வென்ற ஷீத்தல் தேவி மற்றும் ராகேஷ் குமார் ஆகியோருக்கு வாழ்த்துக்கள். அவர்கள் குறிப்பிடத்தக்க திறமையையும் உறுதியையும் நிரூபித்துள்ளனர். இந்த சாதனையால் இந்தியா மகிழ்ச்சி அடைகிறது. #Cheer4Bharat"
***
(Release ID: 2051102)
PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2051261)
வருகையாளர் எண்ணிக்கை : 138
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam