தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தொலைத்தொடர்பு (டிஜிட்டல் பாரத் நிதி நிர்வாகம்) விதிகள், 2024' ஐ மத்திய தொலைத் தொடர்புத் துறை அறிவித்துள்ளது
Posted On:
02 SEP 2024 9:29AM by PIB Chennai
தொலைத்தொடர்புச் சட்டம், 2023, 'தொலைத்தொடர்பு (டிஜிட்டல் பாரத் நிதி நிர்வாகம்) விதிகள் 2024' ஆகியவற்றின் கீழ் மத்தியத் தொலைத் தொடர்பு அமைச்சகத்தின், தொலைத்தொடர்புத் துறை 2024 ஆகஸ்ட் 20-ம் தேதியிட்ட இந்திய அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதற்கான வரைவு விதிகள் 2024 ஜூலை 4 அன்று 30 நாள் பொது ஆலோசனைக்காக வெளியிடப்பட்டது.
இந்திய தந்திச் சட்டம் 1885, தொலைத்தொடர்புச் சட்டம், 2024-ன் பிரிவு 24(1)-ன் படி டிஜிட்டல் பாரத் நிதி என்று மறுபெயரிடப்பட்டுள்ளது., மேலும் இது இப்போது மாறிவரும் தொழில்நுட்ப காலங்களில் டிஜிட்டல் பாரத் நிதியின் ஆதரவு தேவைப்படும் புதிய பகுதிகளை நிவர்த்தி செய்கிறது.
மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்யா சிந்தியா, புதிய விதிகள் தொலைத் தொடர்பு சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான அரசின் உறுதிப்பாட்டை பிரதிபலிப்பதாக சமூக ஊடக வலைதளத்தில் தெரிவித்துள்ளார். இது வளர்ச்சியடைந்த பாரதம் @ 2047-ஆக மாறுவதற்கான இந்தியாவின் நோக்கத்தை வலுப்படுத்துகிறது.
டிஜிட்டல் முறையில் இணைக்கப்பட்ட பாரத் மற்றும் தற்சார்புமிக்க தொலைத் தொடர்புத் துறையை உருவாக்குவதை நோக்கி நடைபோடுகிறோம். தொலைத்தொடர்பு சட்டம் 2023-ன் முதல் விதிகளான 'டிஜிட்டல் பாரத் நிதி' இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது என்பதை பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன். தொலைத்தொடர்பு சேவைகளுக்கு சமமான அணுகலை உறுதி செய்வதற்கான நமது உறுதிப்பாட்டை இது பிரதிபலிக்கிறது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
டிஜிட்டல் பாரத் நிதியின் அமலாக்கம் மற்றும் நிர்வாகத்தை மேற்பார்வையிடும் நிர்வாகியின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகளை இந்த விதிகள் வழங்குகின்றன. டிஜிட்டல் பாரத் நிதியின் கீழ் திட்டங்கள் மற்றும் திட்டங்களை மேற்கொள்வதற்கான அளவுகோல்கள் மற்றும் செயல்படுத்துபவர்களுக்கான தேர்வு செயல்முறை ஆகியவற்றையும் விதிகள் வழங்குகின்றன.
பின்தங்கிய மற்றும் தொலைதூர பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட திட்டங்களுக்கும், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக பலவீனமான பிரிவுகள் போன்ற சமூகத்தின் பின்தங்கிய குழுக்களுக்கும் டிஜிட்டல் பாரத் நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்படும் என்று விதிகள் குறிப்பிடுகின்றன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2050737
-----
(Release ID 2050737)
PKV/KPG/KR
(Release ID: 2050796)
Visitor Counter : 86