பிரதமர் அலுவலகம்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியின் ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற அவானி லெகராவிற்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து
Posted On:
30 AUG 2024 4:37PM by PIB Chennai
பாரீஸ் பாராலிம்பிக் 2024-ல், ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய துப்பாக்கி சுடும் வீராங்கணை அவானி லெகராவிற்கு, பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாராலிம்பிக் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதலாவது பெண் வீராங்கணை என்ற வரலாற்று சாதனையையும் அவானி லெகரா படைத்திருப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ் வலைதளப் பதிவில்;
“#பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024-ல் இந்தியா பதக்க கணக்கைத் தொடங்கியுள்ளது!
ஆர்2 மகளிர் 10மீ. ஏர் ரைஃபிள் எஸ்ஹெச்1 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றுள்ள @அவானி லெகராவிற்கு வாழ்த்துகள். பாராலிம்பிக் போட்டிகளில் 3 பதக்கங்களை வென்ற இந்தியாவின் முதலாவது பெண் வீராங்கணை என்ற வரலாற்று சாதனையையும் அவர் படைத்துள்ளார்!. அவரது அர்ப்பணிப்பு, இந்தியாவிற்கு தொடர்ந்து பெருமிதம் அளிக்கும்.
#Cheer4Bharat” என்று குறிப்பிட்டுள்ளார்.
********
MM/DL
(Release ID: 2050198)
Visitor Counter : 52
Read this release in:
Odia
,
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam