பிரதமர் அலுவலகம்

ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை

இந்தியா-ரஷ்யா சிறப்பு மற்றும் முன்னுரிமை பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.
உக்ரைனுக்கான தனது பயணத்தின் உள்ளுணர்வை பகிர்ந்து கொண்ட பிரதமர், ரஷ்யா-உக்ரைன் மோதலில் பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தை முன்னோக்கி செல்லும் பாதையாக வலியுறுத்தினார்.

Posted On: 27 AUG 2024 3:13PM by PIB Chennai

ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினுடன், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

22-வது இந்தியா-ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த மாதம் ரஷ்யாவுக்கு தான் மேற்கொண்ட வெற்றிகரமான பயணத்தை பிரதமர் நினைவு கூர்ந்தார்.

பல்வேறு இருதரப்பு பிரச்சனைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் ஆய்வு செய்ததுடன், இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான சிறப்பு மற்றும் முன்னுரிமை பாதுகாப்பு பங்களிப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து விவாதித்தனர்.

பரஸ்பர அக்கறை கொண்ட பல்வேறு பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் அவர்கள் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

ரஷ்யா - உக்ரைன் மோதல் குறித்து இரு தலைவர்களும் கருத்து பரிமாற்றம் செய்து கொண்டனர். உக்ரைனுக்கு அண்மையில் தாம் மேற்கொண்ட பயணத்தின் போது கிடைத்த உள்ளுணர்வுகளைப் பிரதமர் பகிர்ந்து கொண்டார். மோதலுக்கு நிலையான மற்றும் அமைதியான தீர்வு காண பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் மற்றும் அனைத்து பங்குதாரர்களுக்கும் இடையிலான நேர்மையான மற்றும் நடைமுறை ஈடுபாட்டின் முக்கியத்துவத்தை அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தலைவர்களும் தொடர்பில் இருக்க ஒப்புக் கொண்டனர்.

***

(Release ID: 2049059)

LKS/AG/KR

 



(Release ID: 2049120) Visitor Counter : 26