விண்வெளித்துறை
azadi ka amrit mahotsav

பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2040-ம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஒரு இந்தியர் தரையிறங்குவார் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் அறிவித்தார்

Posted On: 23 AUG 2024 3:40PM by PIB Chennai

தேசிய விண்வெளி தினத்தை முன்னிட்டு  நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை மற்றும் புவி அறிவியல்துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) டாக்டர் ஜிதேந்திர சிங், இப்போதிலிருந்து பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 2040 ஆம் ஆண்டில் நிலவின் மேற்பரப்பில் ஒரு இந்தியர் தரையிறங்குவார் என்று அறிவித்தார்..

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு முன்னிலையில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய டாக்டர் ஜிதேந்திர சிங், விண்வெளி ஆய்வில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க சாதனைகள் மற்றும் பாரத மண்டபத்தில் நடைபெற்ற கம்பீரமான நிகழ்ச்சியில், அதன் லட்சிய எதிர்கால இலக்குகள் குறித்து பிரதிபலித்தார்.

சந்திரனின் தென் துருவத்தில் சந்திரயான் -3 வரலாற்று ரீதியாக தரையிறங்கியதை டாக்டர் ஜிதேந்திர சிங் எடுத்துரைத்தார், இது உலகை ஆச்சரியப்படுத்தியதுடன், விண்வெளி ஆய்வில் இந்தியாவை முன்னணி நாடாக நிலைநிறுத்தியது.

2023 ஆகஸ்ட் 23, நாடு முழுவதும் தேசிய விண்வெளி தினமாக கொண்டாடப்படும் என்றும், சந்திரயான் -3 தரையிறங்கும் தளத்திற்கு 'சிவ சக்தி பாயிண்ட்' என்று பெயரிடப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்ததை அமைச்சர் நினைவு கூர்ந்தார். இந்த தொடக்க கொண்டாட்டத்தின் கருப்பொருள், "நிலவைத் தொடும் போது வாழ்க்கையைத் தொடுதல்: இந்தியாவின் விண்வெளி சகாப்தம்" நிகழ்வு முழுவதும் எதிரொலித்தது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2048125

***

MM/AG/KR



(Release ID: 2048172) Visitor Counter : 47