பிரதமர் அலுவலகம்

போலந்து கபடி வீரர்களுடன் பிரதமர் சந்திப்பு

Posted On: 22 AUG 2024 9:48PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, வார்சாவில் இன்று (22.08.2024) போலந்து கபடி கூட்டமைப்பின் தலைவர் திரு.மைக்கேல் ஸ்பிக்ஸ்கோ, மற்றும் போலந்து கபடி கூட்டமைப்பின் நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.அன்னா கால்பர்சிஸ்க் ஆகியோரை சந்தித்தார். 

போலந்து நாட்டில் கபடி விளையாட்டை முன்னெடுத்துச் செல்வதிலும், ஐரோப்பாவில் இந்த விளையாட்டை பிரபலப்படுத்துவதிலும்திரு. ஸ்பிக்ஸ்கோ மற்றும் திருமதி. கால்பர்சிஸ்க்  ஆகியோரின் அர்ப்பணிப்பை பிரதமர் பாராட்டினார்.  இந்தியா போலந்து இடையேயான இருதரப்பு உறவுகள் மற்றும் கலாச்சார பரிமாற்றத்தை வளர்ப்பதில் விளையாட்டின் பங்களிப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

**********

Release ID: 2047863

MM/KR



(Release ID: 2047970) Visitor Counter : 11