தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

“இந்தியாவில் படைப்போம் சவால் – பருவம் 1” –ன்கீழ் வேவ்ஸ்-க்கான 25 சவால்களை மத்திய தகவல் – ஒலிபரப்புத்துறை அமைச்சர் திரு.அஸ்வினி வைஷ்ணவ் வெளியிட்டார்

Posted On: 22 AUG 2024 8:11PM by PIB Chennai

படைப்பாளிகளின் பொருளாதாரம், நமது கலாசார பாரம்பரிய செழுமை மற்றும் வாழ்க்க முறை-யை எடுத்துக்காட்டுவதற்கான மிகச்சிறந்த சாதனம் : திரு.அஸ்வினி வைஷ்ணவ்

படைப்பாளிகளின் திறமைகளை மேம்படுத்தக்கூடிய உலகத்தரம்வாய்ந்த பல்கலைகழகம் மற்றும் வசதிகளை ஏற்படுத்த அரசு நடவடிக்கை

திரைப்படத் துறையில் புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்த பெரும் வாய்ப்பு;  இதன் மூலம் 2-3லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் :  மத்திய அமைச்சர்

மத்திய தகவல் – ஒலிபரப்புத்துறை அமைச்சர்  திரு.அஸ்வினி வைஷ்ணவ், “இந்தியாவில் படைப்போம் சவால் –  பருவம்  1” –ன்கீழ் உலக ஒலி, ஒளி & பொழுதுபோக்கு மாநாடு (WAVES)-க்கான 25 சவால்களை 22.08.2024  அன்று   வெளியிட்டார்.  தொடக்க நிகழ்ச்சியில் பேசிய திரு.வைஷ்ணவ், இன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த சவால், நமது வளர்ந்துவரும் மற்றும் உருவாகும் பொருளாதாரத்தின் பிரதிபலிப்பு என்றார்.   முற்றிலும் புதிய படைப்பாளிகளின் பொருளாதாரம்  உருவாக்கப்பட்டிருப்பதுடன், அது, முதலாவது தேசிய படைப்பாளிகள் விருது-ஐ மார்ச் 2024-ல் பிரதமர் வழங்கியபோது, அவரால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.  

வளரும் படைப்பாளிகளின் பொருளாதாரம் :  வாய்ப்புகள், கட்டமைப்பு வசதி, மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம்

இந்தப் பொருளாதாரத்தில் அடங்கியுள்ள மகத்தான வலிமையை சுட்டிக்காட்டிய மத்திய அமைச்சர்,  படைப்பாளிகளின் பொருளாதாரம், நமது கலாசார பாரம்பரிய செழுமை மற்றும் வாழ்க்க முறை, யோகா, பாரம்பரிய மருத்துவ முறை மற்றும் நமது  உணவு வகையின் பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுவதற்கான மிகச்சிறந்த சாதனம் என்றார்.   இந்த வகை பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கான எந்த வாய்ப்பையும் மத்திய அரசு தவறவிடாது என்பதால்,  திறமை, திறன் மேம்பாடு மற்றும் இதுதுறையில் தேவையான கட்டமைப்பு வசதி கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். 

இந்த படைப்பாளிகளின் பொருளாதாரத்தை மேலும் மேம்படுத்த, உலகத்தரம் வாய்ந்த திறமை மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.   ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறையில் உள்ள படைப்பாளிகளின் திறமைகளை மேம்படுத்தத்  தேவையான உலகத்தரம் வாய்ந்த பல்கலைகழகம் மற்றும் பிற வசதிகளை ஏற்படுத்துவதற்கான திட்டமும் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

திரைப்படத் தயாரிப்பில் புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல்: வேலைவாய்ப்பு உருவாக்குதல்

திரைப்படத் தயாரிப்பு என்பது, நமது வலிமைகளில் ஒன்று என்று குறிப்பிட்ட திரு.அஸ்வினி வைஷ்ணவ், தற்போதைய காலகட்டம், இந்தத் துறையில்,  புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் சாதனங்களைப் பயன்படுத்த  பெரும் வாய்ப்பானது என்பதோடு, வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கும் சிறந்த வாய்ப்பு உள்ளதாகக் கூறினார்.   இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டால், அது இத்துறையில் 2-3 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.  

 

சமூகப் பொறுப்புணர்வு

அதேவேளையில், இந்தப் பயணத்தின்போது நமது சமுதாயம் பாதிக்கப்படாமல் இருப்ப்தை நாம் உறுதி செய்ய வேண்டும் என்பதை நினைவூட்டிய மத்திய அமைச்சர், இதற்கான பொறுப்பு அரசுக்கு மட்டுமின்றி, சமுதாயம், தொழில்துறை மற்றும் நம் அனைவருக்கும் உள்ளது என்றும் தெரிவித்தார். 

இத்துறையில் உள்ள அபரிமிதமான வாய்ப்புகளை  மூலதனமாக்க,   வேவ்ஸ்-க்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதுடன், வருங்காலத்தில் இது மிகப்பெரிய நிகழ்வாக உருவெடுக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

தகவல் ஒலிபரப்புதுதுறை செயலாளர் திரு.சஞ்சய் ஜாஜு, கூடுதல் செயலாளர் திருமதி நீரஜா சேகர், இந்திய தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பின் தலைமை இயக்குனர் திருமதி. ஜோதி விஜ், சி.ஐ.ஐ. அமைப்பின் ஊடகம் மற்றும் பொழுதுபோக்க்கிற்கான தேசியக் குழுவின் துணைத்தலைவர் திரு.பிரேன் கோஷ் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  

‘இந்தியாவில் வடிவமைப்போம், உலகிற்காக வடிவமைப்போம்’

நிகழ்ச்சியில் பேசிய திரு.சஞ்சய் ஜாஜு, இந்தியாவின் படைப்பாற்றல் சூழலியலை மேலும் வளர்த்து, உயர்த்துவதில் தற்போது நடைபெற்றுவரும் இயக்கம் குறிப்பிடத்தக்க மைல் கல்லாக அமையும் என்றார்.  78-வது சுதந்திர தின உரையில் நமது பிரதமர் குறிப்பிட்டதுபோல,  “இந்தியாவில் வடிவமைப்போம், உலகிற்காக வடிவமைப்போம்” என்ற தொலைநோக்கு அழைப்பிற்கு ஏற்ப இது அமையும் என்றும் அவர் தெரிவித்தார்.   நம் நாட்டில் உள்ள அபரிமிதமான ஆற்றல்  மற்றும் திறமைகளை சுட்டிக்காட்டிய அவர், வேவ்ஸ் நமது ஆற்றலுக்கு சான்றாக அமைவதுடன், ஒளிமயமான மனது, மிகவும் திறமைவாய்ந்த படைப்பாளிகள், மற்றும் உலகம் முழுவதுமுள்ள தொலைநோக்குப் பார்வையுடைய தலைவர்கள் ஓரிடத்தில் திரள்வதற்கும், அறிவாற்றல், கருத்துக்களை பகிர்ந்துகொண்டு, படைப்பாற்றலை எல்லைகடந்து எடுத்துச் செல்வதற்கான ஒரு அமைப்பாக அமையும் என்றும் கூறினார்.  

‘இந்தியாவில் படைப்போம் சவால்-பருவம் 1’

முன்னணி தொழில் நிறுவனங்களின் சங்கங்கள் மற்றும் அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  இந்த சவால்கள், அனிமேசன், திரைப்படத் தயாரிப்பு, விளையாட்டு, இசை மற்றும் காட்சிக் கலைகள் போன்ற ஏராளமான பிரிவுகளை உள்ளடக்கியதாகும்.   இந்த சவால்கள், பிரதான நிகழ்ச்சிகள் வரை மேற்கொள்ளப்படும்.  

‘இந்தியாவில் படைப்போம்’ சவால்கள்-பருவம் 1ன் பட்டியல்

  1. இந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு சங்கத்தின் அனிம் சவால்
  2. டான்சிங் ஆட்டம்ஸ் நிறுவனத்தின் அனிமேசன் திரைப்படத் தயாரிப்பாளர்கள் போட்டி
  3. இந்திய விளையாட்டு உருவாக்குவோர் அமைப்பின் கேம் ஜாம்
  4. இந்திய இ-விளையாட்டுக் கூட்டமைப்பின் இ-விளையாடுடுப் போட்டி
  5. நகர தேடல் : இ-கேமிங் கூட்டமைப்பின் பாரதத்தின் நிழல்கள்
  6. இந்திய டிஜிட்டல் விளையாட்டு சங்கத்தின் கையடக்க கல்வி வீடியோ விளையாட்டு உருவாக்குதல்
  7. இந்திய காமிக்ஸ் சங்கத்தின் காமிக்ஸ படைப்பாளி சேம்பியன்ஷிப்
  8. இந்திய வர்த்தக-தொழில் கூட்டமைப்பு & விஷிலிங் உட்ஸ் இண்டர்நேஷனல் அமைப்பின் இளம் திரைப்படத் தயாரிப்பாளர் சவால்
  9. வேப்லேப்ஸ் மற்றும் எக்ஸ்டிஜி-யின் எக்ஸ்ஆர் படைப்பாளி
  10. இன் வீடியோ-வின் செயற்கை நுண்ணறிவு திரைப்படத் தயாரிப்பு போட்டி
  11. இந்திய ஒலிபரப்பு & டிஜிட்டல் பவுன்டேசனின் வேவ்ஸ் விளம்பர வீடியோ சவால்
  12. இந்திய செல்லுலார் & மின்னணு சங்கத்தின்  ட்ரூத் டெல் ஹேக்கத்தான்
  13. சமுதாய வானொலி சங்கத்தின் சமுதாய வானொலி உள்ளடக்க சவால்
  14. இந்திய இசைத் தொழில் அமைப்புகளின்  மையக்கருத்து இசைப் போட்டி
  15. இந்திய விளம்பர முகமைகள் சங்கத்தின்  வேவ்ஸ் ஹேக்கத்தான் :  ஆட்ஸ்பென்ட் ஆப்டிமைசர்
  16. இந்திய இணையதள மற்றும் செல்போன் சங்கத்தின் வேவ்ஸ் செயற்கை நுண்ணறிவு கலை நிறுவுதல் சவால்
  17. இந்திய இணையதள மற்றும் செல்போன் சங்கத்தின் வேவ்ஸ் ஆராய்தல்
  18. இந்திய இணையதள மற்றும் செல்போன் சங்கத்தின் ரீல் தயாரிப்பு சவால்
  19. தேசிய திரைப்பட ஆவணக் காப்பகம் – தேசிய திரைப்பட வளர்ச்சிக் கழகத்தின் திரைப்பட சுவரொட்டி தயாரிப்புப் போட்டி
  20. ஏவிடிஆர் மெட்டா லேப்ஸின் மெய்நிகர் தாக்க உருவாக்குதல் போட்டி
  21. பிரசார் பாரதியின்  பேட்டில் ஆஃப்  தி பேன்ட்ஸ்
  22. பிரசார் பாரதியின் இந்திய சிம்பொனி
  23. ஒலிபரப்பு பொறியியல் ஆலோசகர்கள் இந்தியா நிறுவனத்தின்  இந்தியா: ஒரு பறவைக் கண்ணிண் காட்சி
  24. இந்தியத் தொழில் கூட்டமைப்பின் திருட்டு வீடியோ சவால் 
  25. இந்திய வர்த்தகத் – தொழில் சங்கங்களின் கூட்டமைப்பின் முன்னோட்டத் தயாரிப்புப் போட்டி 

இந்த சவால்களுக்கான பதிவு, விரைவில் தொடங்க உள்ளது.  மேலும் விவரங்களுக்கு  wavesindia.org  இணையதளத்தைக் காணவும்.  

                                                       *********

(Release ID: 2047812) 

MM/KR

 

 

 

 

 

***

 



(Release ID: 2047934) Visitor Counter : 12