பிரதமர் அலுவலகம்
வார்சாவில் உள்ள டோப்ரி மகாராஜா நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
Posted On:
21 AUG 2024 11:57PM by PIB Chennai
வார்சாவில் உள்ள டோப்ரி மகாராஜா நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
வார்சாவின் குட் மகாராஜ் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த நினைவிடம், நவாநகர் திக்விஜய்சிங்ஜி ரஞ்சித்சிங்ஜி ஜடேஜா [குஜராத்தில் உள்ள நவீன ஜாம்நகரின்] ஜாம் சாகிப் மீது போலந்து மக்களும் அரசும் கொண்டுள்ள ஆழ்ந்த மரியாதை மற்றும் நன்றியை நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது. இரண்டாம் உலகப் போரின் போது, ஜாம் சாகிப், ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலந்து குழந்தைகளுக்கு அடைக்கலம் அளித்தது, இன்று போலந்தில் டோப்ரி (நல்ல) மகாராஜா என்று நினைவுகூரப்படுகிறது. அவரது தாராள மனப்பான்மையின் ஆழமான தாக்கம், போலந்து மக்களிடையே நிலவுகிறது. நினைவிடத்தில், ஜாம் சாகிப்பால் அடைக்கலம் அளிக்கப்பட்ட போலந்து மக்களின் வாரிசுகளை பிரதமர் சந்தித்தார்.
இந்த நினைவிடத்திற்கு பிரதமர் வருகை தந்தது, இந்தியா மற்றும் போலந்து இடையேயான சிறப்பான வரலாற்று தொடர்பை எடுத்துரைக்கிறது.
*****
RB/DL
(Release ID: 2047745)
Visitor Counter : 52
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam