தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்

குறுஞ்செய்தி சேவைகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை: சேவை வழங்குநர்களுக்கு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு

Posted On: 20 AUG 2024 2:01PM by PIB Chennai

குறுஞ்செய்தி சேவைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதற்கும், மோசடி நடைமுறைகளிலிருந்து நுகர்வோரைப் பாதுகாப்பதற்குமான நடவடிக்கைகளை அமல்படுத்துவதற்கான உத்தரவுகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) பிறப்பித்தது. இன்று (20.08.2024)   வெளியிடப்பட்ட வழிகாட்டுதலின்படி, அனைத்து அணுகல் சேவை வழங்குநர்களும் பின்வருவனவற்றை உறுதி செய்ய வேண்டும் என்று தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டாயப்படுத்தியுள்ளது.

வழிகாட்டுதலின் சரியான தகவலுக்கு டிராய் இணையதளத்தில் கிடைக்கும் வழிகாட்டுதலை www.trai.gov.in பார்க்குமாறு பங்குதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தூய்மையான, பாதுகாப்பான செய்தி சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதற்கும், நுகர்வோர் நலன்களைப் பாதுகாப்பதற்கும், மோசடி நடவடிக்கைகளைத் தடுப்பதற்கும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்முயற்சிகள் முன்னெடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டிற்காக 140 தொடர்களில் தொடங்கி டெலிமார்க்கெட்டிங் அழைப்புகளை ஆன்லைன் டிஎல்டி தளத்திற்கு 2024, செப்டம்பர் 30-க்குள் மாற்ற அணுகல் சேவை வழங்குநர்களை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டாயப்படுத்தியுள்ளது.

2024, செப்டம்பர் 1 முதல், அனைத்து அணுகல் சேவை வழங்குநர்களும் URLகள், APKகள், OTT இணைப்புகள் அல்லது அனுப்புநர்களால் அனுமதிப்பட்டியலில் சேர்க்கப்படாத அழைப்பு எண்களைக் கொண்ட செய்திகளை அனுப்புவது தடைசெய்யப்படும்.

செய்தி தடமறிதலை மேம்படுத்த, அனுப்புநர்களிடமிருந்து பெறுநர்களுக்கு அனைத்து செய்திகளின் தடமும்  2024, நவம்பர் 1 முதல் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்று இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டாயப்படுத்தியுள்ளது. வரையறுக்கப்படாத அல்லது பொருந்தாத டெலிமார்க்கெட்டர் சங்கிலியைக் கொண்ட எந்த செய்தியும் நிராகரிக்கப்படும்.

விளம்பர உள்ளடக்கத்திற்கான வார்ப்புருக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க, (டிராய்) இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் இணங்காததற்கான தண்டனை நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

விதிமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்ய, DLT-ல் பதிவு செய்யப்பட்ட அனைத்து தலைப்புகள் மற்றும் உள்ளடக்க வார்ப்புருக்கள் பரிந்துரைக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும்.

ஏதேனும் அனுப்புநரின் தலைப்புகள் அல்லது உள்ளடக்க வார்ப்புருக்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்டால், அந்த அனுப்புநரின் அனைத்து தலைப்புகள் மற்றும் உள்ளடக்க வார்ப்புருக்களின் சரிபார்ப்புக்காக போக்குவரத்தை உடனடியாக நிறுத்தி வைக்க டிராய் உத்தரவிட்டுள்ளது. அத்தகைய தவறான பயன்பாட்டிற்கு எதிராக அனுப்புநர் சட்ட நடவடிக்கை எடுத்த பின்னரே அனுப்புநரிடமிருந்து போக்குவரத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும், டெலிவரி-டெலிமார்க்கெட்டர்கள் இரண்டு வணிக நாட்களுக்குள் அத்தகைய தவறான பயன்பாட்டிற்கு பொறுப்பான நிறுவனங்களை அடையாளம் கண்டு புகாரளிக்க வேண்டும். தவறினால் அவர்கள் இதே போன்ற விளைவுகளை சந்திக்க நேரிடும்.

மேலும் விவரங்களை இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2046872

***

LKS/RS/KR

 



(Release ID: 2046917) Visitor Counter : 40