பிரதமர் அலுவலகம்
தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
இடுகை இடப்பட்ட நாள்:
18 AUG 2024 11:53AM by PIB Chennai
தாய்லாந்து பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திருமதி பெடோங்டர்ன் ஷினவத்ராவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நாகரிகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான, இந்தியா- தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி கூறியிருப்பதாவது:
"தாய்லாந்து பிரதமராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள் @ingshin. வெற்றிகரமான பதவிக்காலத்திற்கு வாழ்த்துகள். நாகரீகம், கலாச்சாரம் மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பு என்ற வலுவான அடித்தளத்தின் மீதான இந்தியா - தாய்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்."
*****
SMB / KV
(வெளியீட்டு அடையாள எண்: 2046393)
வருகையாளர் எண்ணிக்கை : 116
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam