குடியரசுத் தலைவர் செயலகம்
78-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் நாட்டு மக்களுக்கு நாளை உரையாற்றுகிறார்
Posted On:
13 AUG 2024 6:09PM by PIB Chennai
78-வது சுதந்திர தினத்தையொட்டி குடியரசுத்தலைவர் திருமதி திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு நாளை (ஆகஸ்ட்14,2024) உரையாற்றுகிறார்.
அவரது உரை ஆகாசவாணியின் ஒட்டுமொத்த தேசிய வலைப்பின்னலிலும், தூர்தர்ஷனின் அனைத்து அலைவரிசைகளிலும் இரவு 7 மணியிலிருந்து, இந்தியிலும், அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் ஒலிபரப்பாகும். தூர்தர்ஷனில் இந்தியிலும், ஆங்கிலத்திலும் ஒலிபரப்பாகும் உரையைத் தொடர்ந்து தூர்தர்ஷனின் மண்டல அலைவரிசைகளில் மாநில மொழிகளில் ஒலிபரப்பாகும். ஆகாசவாணி, அதன் மாநில அலைவரிசைகளில் இந்த உரையை இரவு 9.30 மணிக்கு மாநில மொழிகளில் ஒலிபரப்பும்.
***
SMB/AG/DL
(Release ID: 2044979)
Visitor Counter : 40