கலாசாரத்துறை அமைச்சகம்

பாரம்பரிய தலங்களை பாதுகாப்பதில் முன்னோடியாக திகழும் இந்தியா

Posted On: 31 JUL 2024 3:58PM by PIB Chennai

பாரம்பரிய தலங்களை பாதுகாக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் கடந்த 21-ம் தேதி முதல் நடைபெற்று வந்த உலகப் பாரம்பரிய குழுவின் 46-வது வருடாந்திர கூட்டம் இன்று  நிறைவடைந்தது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஷெகாவத், உலகப் பாரம்பரிய தலங்கள் மாநாட்டின்  முடிவுகளை செயல்படுத்த இந்தியா நீண்ட காலமாக வலியுறுத்தி வருவதை சுட்டிக்காட்டினார். அண்டை நாடுகளிலும் பல்வேறு பாதுகாப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மேற்கொள்வதன் வாயிலாக எல்லை கடந்து பணியாற்றும் திறன் வெளிப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் இந்தியாவில் உள்ள 13 இடங்கள் உலக பாரம்பரிய தலங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும்  அமைச்சர்  குறிப்பிட்டார். இந்தியாவில் இருந்து 43-வது  பாரம்பரிய தலமாக அசாமில் உள்ள மொய்தாம்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறிய அமைச்சர் இதன் மூலம் உலக அளவில் அதிக பாரம்பரிய தலங்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா 6-வது இடத்திற்கு வந்திருப்பதாகவும் தெரிவித்தார். அது மட்டுமின்றி காசி விஸ்வநாதர் ஆலய பெருந்திட்ட வளாகம், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானம், பண்டை கால நாளந்தா பல்கலைக்கழகத்தின் புதிய வளாக கட்டுமானம் போன்ற பாரம்பரிய தலங்கள் பாதுகாப்பு பணியை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் திரு கஜேந்திர சிங் ஷெகாவத் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2039616         

***

MM/AG/KR/DL



(Release ID: 2039810) Visitor Counter : 30