தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஐஸ்வாலில் இந்தியாவின் 500-வது சமூக வானொலி நிலையத்தை மத்திய அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் திறந்து வைத்தார்

மதுரை, நீலகிரி மாவட்ட வானொலிகளுக்கு 10-வது தேசிய சமூக வானொலி விருதுகள்

Posted On: 25 JUL 2024 1:03PM by PIB Chennai

10-வது தேசிய சமூக வானொலி விருதுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இன்று அறிவித்தார். மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன், மிசோரம் முதலமைச்சர் திரு லால்டுஹோமா ஆகியோர் முன்னிலையில், இந்தியாவின் 500-வது சமூக வானொலி நிலையத்தையும் அமைச்சர் தொடங்கி வைத்தார். 'அப்னா ரேடியோ 90.0 எஃப்.எம்' நிலையம் இந்திய மக்கள் தொடர்பு நிறுவனத்தால் நடத்தப்படும் ஒரு நிலையமாகும்.

இந்தியாவின் சமூக வானொலி பயணத்தில் இந்த மைல்கல்லை அறிவித்த திரு வைஷ்ணவ், இந்த முயற்சி அப்னா வானொலி நிலையத்தின் கவரேஜ் பகுதியில் உள்ள மக்களின் வாழ்க்கையில் கணிசமான மாற்றத்தைக் கொண்டுவரும் என்று கூறினார். அரசின் கிழக்கு நோக்கிய கொள்கையில் இந்தத் தொடக்கம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

மத்திய பட்ஜெட்டில் வடகிழக்கு பிராந்தியத்திற்கான ரயில்வே திட்டங்களுக்கு சாதனை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று மிசோரம் முதலமைச்சரிடம், அமைச்சர் தெரிவித்தார். நல்ல ரயில் இணைப்பு பெற வேண்டும் என்ற மிசோரமின் நீண்டகால கனவுக்கு இது வலு சேர்க்கும்.

கூட்டத்தினரிடையே உரையாற்றிய முதலமைச்சர் திரு. லால்டுஹோமா, ஐ.ஐ.எம்.சி அய்ஸ்வாலில் உள்ள அப்னா வானொலி நிலையம் மாநிலத்திற்கான தகவல் தொடர்பில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் என்று கூறினார்.

மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல்.முருகன் இத்தகைய வானொலி நிலையங்களின் சமூக நன்மை பயக்கும் தன்மையை ஆராய்ந்து, தனியார் வானொலி அலைவரிசைகளின் வணிகத் தன்மைக்கு மாறாக, கடைசி மைல் தகவல் தொடர்புக்கான உறுதிப்பாட்டின் அடிப்படையில் சமூக வானொலி நிலையங்கள் அமைக்கப்படுகின்றன என்று கூறினார். இயற்கை பேரிடர் காலங்களில் இந்த நிலையங்களின் பங்கு கணிசமாக உயரும் என்று அவர் மேலும் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் செயலாளர் திரு சஞ்சய் ஜாஜு, விவசாயம் தொடர்பான தகவல்கள், விவசாயிகள் நலனுக்கான அரசு திட்டங்கள், வானிலை தகவல்கள் போன்றவற்றை பரப்புவதில் சமூக வானொலி நிலையங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன என்று கூறினார்.

சமூக வானொலி நிலையங்களிடையே, புதுமை மற்றும் ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிப்பதற்காக, அமைச்சகம் 2011-12-ம் ஆண்டில் தேசிய சமூக வானொலி விருதுகளை நிறுவியது. ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இந்த விருதுகளில், இந்த ஆண்டு கருப்பொருள் விருது, மிகவும் புதுமையான சமூக ஈடுபாடு விருது, உள்ளூர் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் விருது, நிலைத்தன்மை மாதிரி விருது என 4 பிரிவுகளில் வழங்கப்படுகிறது. 

ஒவ்வொரு பிரிவிற்கும் 3 பரிசுகள், முறையே ரூ.1 லட்சம்,  ரூ.75,000, ரூ.50,000 என வழங்கப்படுகின்றன.

மிகவும் புதுமையான சமூக ஈடுபாடு விருதுக்கு மதுரை வயலக வானொலியின் ஒரு புதிய நெறிமுறையை உருவாக்குவோம். நிகழ்ச்சிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த வானொலிக்கு 2-ம் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கலாச்சாரத்தை ஊக்குவித்தல் விருது பிரிவில் இரண்டாம் பரிசு நீலகிரியின் வானொலி கோத்தகிரியின் என் மக்களுடன் பயணம்  என்ற நிகழ்ச்சிக்காக வழங்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணலாம்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2036696

***

PKV/KPG/KR


(Release ID: 2036913) Visitor Counter : 58