நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வணிக சீர்திருத்த செயல் திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் மயமாக்கலை செயல்படுத்த மாநிலங்கள் ஊக்குவிக்கப்படும்: மத்திய பட்ஜெட் 2024-25

Posted On: 23 JUL 2024 12:56PM by PIB Chennai

'வளர்ச்சியடைந்த பாரதம்' திட்டத்தை செயல்படுத்துவதற்காகவும் அனைவருக்கும் ஏராளமான வாய்ப்புகளை உருவாக்கும் வகையிலும், வணிகம் செய்வதை எளிதாக்குதல், திவால் மற்றும் நொடித்துப்போதல் நடை முறையை வலுப்படுத்துதல் ஆகியவற்றை உறுதி செய்ய,  சிறப்பு கவனத்துடன் 9 முன்னுரிமை துறைகள் மீது நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

எளிதாக வணிகம் செய்தல்

வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், ஏற்கனவே ஜன் விஸ்வாஸ் மசோதா 2.0-ல் அக்கறை செலுத்தப்படுவதாக மத்திய நிதியமைச்சர் கூறினார். மாநிலங்கள் தங்களது வணிக சீர்திருத்த செயல் திட்டங்கள் மற்றும்  டிஜிட்டல் மயமாக்கலை அமல்படுத்த ஊக்கமளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

திவால் மற்றும் நொடித்துப்போதல் நடைமுறையை வலுப்படுத்துதல்

திவால் மற்றும் நொடித்துப்போதல் சட்டத்தின் (ஐபிசி) கீழ் அதன் செயல்பாட்டு  விளைவுகளை மேம்படுத்துவதற்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தளம் அமைக்கப்படும் என்றும் நிதியமைச்சர் அறிவித்தார். இதன் மூலம், தொடர்புடையவர்கள் அனைவருக்கும் நிலைத்தன்மை, வெளிப்படைத்தன்மை, உரிய நேரத்தில் செயல்பாடு, சிறந்த மேற்பார்வை ஆகியவை உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

1,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு திவால் மற்றும் நொடித்துப்போதல் முறை மூலம் தீர்வு கண்டுள்ளதாகவும், இதன் விளைவாக கடன் வழங்கியவர்கள் ரூ.3.3 லட்சம் கோடி நேரடியாக மீட்டுள்ளதாகவும் திருமதி நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார். அதேபோல், ரூ.10 லட்சம் கோடி மதிப்புக்கு மேல் தொடர்புடைய 28,000 வழக்குகள் அவை  அனுமதிக்கப்படுவதற்கு முன்பாகவே தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் மத்திய நிதியமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035585

***  

MM/IR/RS/KR


(Release ID: 2035849) Visitor Counter : 96