நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய பட்ஜெட் 2024-2025-ன் சுருக்கம்

Posted On: 23 JUL 2024 1:21PM by PIB Chennai

2024-2025-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, 9 முன்னுரிமை துறைகளில் நீடித்த முயற்சி மேற்கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி,

  1. வேளாண் துறையில் உற்பத்தி மற்றும் மறுமலர்ச்சி
  2. வேலைவாய்ப்பு & திறன் பயிற்சி
  3. உள்ளடக்கிய மனிதவள மேம்பாடு மற்றும் சமூக நீதி
  4. தயாரிப்பு & சேவைகள்
  5. நகர்ப்புற மேம்பாடு
  6. எரிசக்தி பாதுகாப்பு
  7. கட்டமைப்பு வசதி
  8. புதுமை கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி & மேம்பாடு
  9. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்

ஆகிய 9 துறைகள் வாயிலாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை  உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  • இந்தியாவின் பணவீக்கம் தொடர்ந்து குறைவாகவும், நிலையானதாகவும், 4 சதவீதம் என்ற இலக்கை நோக்கியும் செல்கிறது.
  • 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம், திறன் பயிற்சி அளித்தல் மற்றும் பிற வாய்ப்புகளை வழங்குவதற்காக, ரூ. 2 லட்சம் கோடி மதிப்பிலான 5 திட்டங்கள் மற்றும் முன்னெடுப்புகள் அடங்கிய பிரதமரின் தொகுப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
  • வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க, 9 முன்னுரிமை துறைகள் வாயிலாக அனைவருக்கும் உரிய வாய்ப்புகளை ஏற்படுத்தி தரும் வகையில் நீடித்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
  • 2024-25 பட்ஜெட்டில், வேலைவாய்ப்பு, திறன் பயிற்சி, குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மற்றும் நடுத்தர வகுப்பினர் நலனில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
  • விவசாயிகள் சாகுபடி செய்வதற்காக, உயர் விளைச்சல் தரக்கூடிய மற்றும் அனைத்து பருவ நிலைகளையும் தாக்குப்பிடிக்கக் கூடிய, 109 புதிய பயிர் ரகங்களும், தோட்டக்கலை பயிர்களும் அறிமுகப்படுத்தப்படும்.
  • அடுத்த இரண்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஒரு கோடி விவசாயிகள் இயற்கை விவசாயத்தை பின்பற்ற முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • வேளாண்மை மற்றும் அதனைச் சார்ந்த துறைகளுக்கு இந்த பட்ஜெட்டில் ரூ 1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • 1,000 தொழில் பயிற்சி மையங்கள் மேம்படுத்தப்படும்.
  • பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தை உள்ளடக்கிய கிழக்குப் பிராந்தியத்தின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கு, ‘பூர்வோதயா’ எனப்படும் புதிய திட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது.
  • மகளிர் சார்ந்த முன்னேற்றத்தை ஊக்குவிக்க, மகளிர் மற்றும் சிறுமிகள் நலனுக்கான திட்டங்களுக்காக, ரூ. 3 லட்சம் கோடிக்கும் அதிகமான தொகை பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கிராமப்புற கட்டமைப்பு வசதி உள்ளிட்ட கிராமப்புற வளர்ச்சி திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • முத்ரா கடன் தொகை தற்போதுள்ள ரூ. 10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரிக்கப்படும்.
  • 5 ஆண்டுகளில் ஒரு கோடி இளைஞர்களுக்கு, 500 பெரிய தொழிற்சாலைகளில்  பணி அனுபவ பயிற்சி வழங்குவதற்கான விரிவான திட்டத்தை அரசு செயல்படுத்தவுள்ளது.
  • பிரதமரின் வீட்டு வசதி திட்டம் – நகர்ப்புறம் 2.0-ன் கீ்ழ், ரூ. 10 லட்சம் கோடி முதலீட்டில், ஒரு கோடி நகர்ப்புற ஏழைகள் மற்றும் நடுத்தர குடும்பங்களின் வீட்டு வசதி தேவை பூர்த்தி செய்யப்படும்.
  • 25,000 கிராமப்புற குடியிருப்புகளுக்கு அனைத்து பருவ நிலைகளையும் தாக்குபிடிக்கக் கூடிய இணைப்பு வசதியை ஏற்படுத்த, பிரதமரின் கிராமச்சாலைகள் திட்டத்தின் 4-ம் கட்டம் செயல்படுத்தப்படும்.
  • அடுத்த பத்து ஆண்டுகளில், ரூ 1,000 கோடி கூட்டு தொழில் மூலதனத்தில் விண்வெளி பொருளாதாரத்தை 5 மடங்கு விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்ளப்படும்.
  • வருமான வரி செலுத்தும் 4 கோடி மாத சம்பளம் பெறும் தனிநபர் மற்றும் ஓய்வூதியர்களுக்கு நிவாரணம்.
  • புதிய வருமானவரி நடைமுறையின்படி நிலையான கழிவுத் தொகை ரூ.50,000-லிருந்து ரூ.75,000 ஆக அதிகரிக்கப்படும்.
  • குடும்ப ஓய்வூதியத்திற்கான கழிவுத் தொகை ரூ.15,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்படும்.
  • புதிய வரி நடைமுறையின் கீழ், பெரு நிறுவனங்கள் வரி
    58 சதவீதத்திற்கும் மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.
  • தனிநபர் வருமான வரி செலுத்துவோரில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோர் புதிய வருமான வரி நடைமுறைக்கு மாறியுள்ளனர்.
  • புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்க, அனைத்து தரப்பையும் சேர்ந்த முதலீட்டாளர்கள் மீதான ஏஞ்சல் வரி கைவிடப்படுகிறது.
  • முதலீடுகளை ஈர்க்க ஏதுவாக, வெளிநாட்டு நிறுவனங்கள் மீதான பெரு நிறுவன வரி 40 சதவீதத்தில் இருந்து 35 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
  • சம்பளம் வழங்குமிடத்தில் பிடித்தம் செய்யப்படும் 5 சதவீத  வரி, 2 சதவீத வரி பிடித்த நடைமுறையுடன் இணைக்கப்படும்
  • குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் பயனடையும் விதமாக, மூலதன ஆதாய விலக்கு உச்சவரம்பு, ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
  • எக்ஸ்ரே பேனல்கள், செல்போன்கள் மற்றும் பிசிபிஏ-க்கள் மீதான சுங்க வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
  • தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த உலோகங்களின் விலையை குறைக்கும் விதமாக அவற்றின் மீதான சுங்க வரி
    6 சதவீதமாக குறைக்கப்படுகிறது என  மத்திய பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

***

(Release ID: 2035618)

MM/AG/KR



(Release ID: 2035831) Visitor Counter : 504