நிதி அமைச்சகம்
மத்திய நிதியுதவியுடன் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
இடுகை இடப்பட்ட நாள்:
23 JUL 2024 1:06PM by PIB Chennai
பிரதமரின் தொகுப்புத் திட்டத்தின் கீழ் 4-வது திட்டமாக மத்திய நிதியுதவியுடன் புதிய திறன் மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் மாநில அரசுகள் மற்றும் தொழில் துறையுடன் இணைந்து திறன் மேம்பாட்டிற்காக பிரதமரின் தொகுப்பின் கீழ் 4-வது திட்டமாக மத்திய அரசு ஆதரவிலான புதிய திட்டத்தை அறிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று 2024-25 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர், 5 ஆண்டு காலப்பகுதியில் 20 லட்சம் இளைஞர்கள் திறன் பெற்றவர்களாக இருப்பார்கள் என்றும், 1,000 தொழில்துறை பயிற்சி நிறுவனங்கள் மையத்தில் மேம்படுத்தப்படும் என்றும் கூறினார்.
திறன் கடன்களைப் பொறுத்தவரை, அரசால் ஊக்குவிக்கப்பட்ட நிதியிலிருந்து உத்தரவாதத்துடன் ரூ.7.5 லட்சம் வரை கடன்களை எளிதாக்கும் வகையில் மாதிரி திறன் கடன் திட்டம் திருத்தப்படும் என்று நிதியமைச்சர் அறிவித்தார். இந்த நடவடிக்கை ஒவ்வொரு ஆண்டும் 25,000 மாணவர்களுக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
***
(Release ID: 2035592)
PKV/RR/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2035806)
வருகையாளர் எண்ணிக்கை : 145
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Hindi_MP
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam