நிதி அமைச்சகம்

மூலதன லாபங்கள் மீதான வரிவிதிப்பு எளிதாக்கப்பட்டுள்ளது

Posted On: 23 JUL 2024 1:10PM by PIB Chennai

மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், மக்களவையில் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக மூலதன லாபங்கள் மீதான வரிவிதிப்பு எளிதாக்கப்பட்டு சீர்திருத்தப்பட்டு இருப்பது முக்கிய அம்சமாக உள்ளது.

நிதி மற்றும் நிதிசாராத சொத்துக்கள் மீதான நீண்டகால ஆதாயங்களுக்கு 12.5 சதவீதம் வரிவிதிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.  குறைந்த, நடுத்தர வருவாய் பிரிவினர் பயனடையும் வகையில், குறிப்பிட்ட சில மூலதன லாபங்களுக்கு வரிவிலக்கு அளிக்க, ஆண்டு வருவாய்  வரம்பு ஒரு லட்சம் ரூபாயிலிருந்து 1.25 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பட்டியலிடப்படாத பத்திரங்கள், பங்குகள், பரஸ்பர நிதி வரவுகள், சந்தையுடன் இணைக்கப்பட்ட பங்குகள் போன்றவற்றுக்கு மூலதன லாபம் மீதான வரிவிகிதத்திற்கு பொருந்துவதாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2035596

***

SMB/KV/KR

 



(Release ID: 2035791) Visitor Counter : 9