நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுங்க வரிகளில் சீர்திருத்தங்கள் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதுடன் ஏற்றுமதிக்கான போட்டித்தன்மையை ஊக்குவிக்கும்; நிதியமைச்சர்

Posted On: 23 JUL 2024 1:12PM by PIB Chennai

சுங்க வரிகள் தொடர்பான பட்ஜெட் முன்மொழிவுகள் உள்நாட்டு உற்பத்தியை  ஊக்குவிக்கவும், ஏற்றுமதிக்கான போட்டித்தன்மையை மேம்படுத்தவும், வரிவிதிப்பை எளிமைப்படுத்தவும், நுகர்வோரின் நலன்களை காக்கவும் உதவும் என்று மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தது பட்ஜெட் உரையில் தெரிவித்தார். உயிர் காக்கும் மருந்துகள் முதல் அரிய கனிமங்கள் வரை பல்வேறு பொருட்களுக்கு புதிய சுங்க வரி விகிதங்கள் முன்மொழியப்படுவதாக அவர் தெரிவித்தார்.

புற்றுநோயாளிகளுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, டிராஸ்டுஜுமாப் டெரக்ஸ்டெக்கான், ஒசிமெர்டினிப், துர்வாலுமாப் ஆகிய மூன்று மருந்துகளுக்கு சுங்க வரியிலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் உள்நாட்டு மொபைல் போன்களின் உற்பத்தி மூன்று மடங்கு அதிகரித்துள்ளது எனவும் மொபைல் போன்களின் ஏற்றுமதி கிட்டத்தட்ட நூறு மடங்கு உயர்ந்துள்ளது என்றும் நிதியமைச்சர் கூறினார். நுகர்வோரின் நலனைக் கருத்தில் கொண்டு, மொபைல் போன், மொபைல் பிசிபிஏ, மொபைல் சார்ஜர் மீதான அடிப்படை சுங்க வரி 15 சதவீதமாகக் குறைக்கப்படுவதாக நிதியமைச்சர் அறிவித்தார்.  

25 முக்கிய கனிமங்கள் மீதான சுங்க வரியிலிருந்து முழு விலக்கு அளிப்பதாகவும் நிதியமைச்சர் அறிவித்தார். இது விண்வெளி, பாதுகாப்பு, தொலைத்தொடர்பு, உயர் தொழில்நுட்ப மின்னணுவியல், அணுசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளுக்கு பயனளிக்கும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், நாட்டில் சூரிய மின்கலங்கள், பேனல்கள் தயாரிப்பில் பயன்படுத்த விலக்கு அளிக்கப்பட்ட மூலதனப் பொருட்களின் பட்டியலை விரிவுபடுத்துவதாக அமைச்சர் அறிவித்தார்.

தோல், ஜவுளித் துறைகளில் ஏற்றுமதியில் போட்டித் திறனை அதிகரிக்கும் வகையில், பல்வேறு தோல் மூலப்பொருட்களுக்கும் சுங்க வரி குறைப்பு, விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தங்கம், விலையுயர்ந்த உலோக நகைகளின் உள்நாட்டு மதிப்புக் கூட்டலை அதிகரிக்க தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகவும், பிளாட்டினம் மீதான வரி 15.4 சதவீதத்திலிருந்து 6.4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டுள்ளது.

சுங்க வரி விகித கட்டமைப்பை எளிமைப்படுத்த அடுத்த ஆறு மாதங்களில் விரிவான மறுஆய்வு மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

***

(Release ID: 2035601)
 

PLM/KR

 


(Release ID: 2035780) Visitor Counter : 61