நிதி அமைச்சகம்
புதிய திறன் மேம்பாட்டு முயற்சிகளும், தற்போதுள்ள திட்டங்களை சீரமைப்பதும் அரசின் உயர் முன்னுரிமையாக இருக்க வேண்டும்: பொருளாதார ஆய்வறிக்கை 2023-24
Posted On:
22 JUL 2024 2:37PM by PIB Chennai
இந்தியாவின் கல்விக் கொள்கைகள் மற்றும் திறன் கொள்கைகள், கற்றல் மற்றும் திறன் விளைவுகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும், மேலும் ஒன்றை ஒன்று சீரமைக்க வேண்டும். மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்த 2023-24 பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, 2047-இல் வளர்ந்த இந்தியா என்ற கூட்டு இலக்கை அடைவதற்கான ஆறு முக்கிய தூண்களில் இதுவும் ஒன்றாகும். இந்த நோக்கத்தை அடைய தேசிய கல்விக் கொள்கை 2020 ஒரு நல்ல கட்டமைப்பை வழங்குகிறது என்று கூறிய ஆய்வறிக்கை, புதிய திறன் மேம்பாட்டு முயற்சிகள் மற்றும் தற்போதுள்ள திறன் மேம்பாட்டு முயற்சிகளை சீரமைப்பது ஆகியவை அரசின் உயர் முன்னுரிமையாகத் தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
பள்ளிக்கல்வி, அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மற்றும் தரத்திற்கு ஏற்ற கற்றல் விளைவுகளை உணர்தல் ஆகியவற்றின் அடிப்படைத் தேவைகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
இந்திய இளைஞர்களின் லட்சியங்கள் மற்றும் திறன்களுடன் ஒத்திசைவான வேலை மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை 2023-24 கூறுகிறது. அனைத்து சமூக-பொருளாதார வகைப்பாடுகளிலும் திறமையான நபர்களின் விகிதத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எடுத்துக்காட்டிய ஆய்வறிக்கை, 15-29 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் 4.4 சதவீதம் பேர் முறையான தொழில் / தொழில்நுட்ப பயிற்சியைப் பெற்றுள்ளனர் என்றும், 16.6 சதவீதம் பேர் முறைசாரா ஆதாரங்கள் மூலம் பயிற்சி பெற்றுள்ளனர் என்றும் குறிப்பிடுகிறது.
இந்தியா தனது இளம் தொழிலாளர்களின் திறனை மட்டும் அங்கீகரிக்கவில்லை, இவ்வளவு பெரிய மக்கள்தொகை, திறன் வளர்ப்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் அங்கீகரித்துள்ளது என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் தொடர்பான தேசிய கொள்கை (என்.பி.எஸ்.டி.இ) இடைவெளிகளைக் குறைத்தல், தொழில்துறை ஈடுபாட்டை மேம்படுத்துதல், தர உத்தரவாத கட்டமைப்பை நிறுவுதல், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது என்று அது கூறுகிறது. தேசிய கல்விக் கொள்கையுடன் இணைந்து, இந்தியாவில் கல்வி-வேலைவாய்ப்பு இடைவெளியைக் குறைப்பதற்கான மிகப்பெரிய ஆற்றலை இது கொண்டுள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034924
***
(Release ID: 2035619)
Visitor Counter : 53