நிதி அமைச்சகம்

இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய 2030 ஆம் ஆண்டு வரை பண்ணை சாரா துறையில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 78.5 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும்

Posted On: 22 JUL 2024 3:19PM by PIB Chennai

மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில், இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைய 2030 ஆம் ஆண்டு வரை பண்ணை சாரா துறையில் ஆண்டுக்கு கிட்டத்தட்ட 78.5 லட்சம் வேலைகளை உருவாக்க வேண்டியது அவசியமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 ஆண்டுகளில் 60 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான , உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம், மித்ரா ஜவுளித் திட்டம் (20 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குதல்), முத்ரா திட்டம் போன்ற தற்போதுள்ள திட்டங்களின் அமலாக்கத்தை அதிகரிக்கும் போது, வேலை வாய்ப்பு உயர  வாய்ப்புகள் உள்ளன என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

செயற்கை நுண்ணறிவின் விரைவான வளர்ச்சியால், அடுத்த பத்து ஆண்டுகளில் பிபிஓ  துறையில் வேலைவாய்ப்பு கணிசமாகக் குறையும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இருப்பினும், அடுத்த தசாப்தத்தில், செயற்கை நுண்ணறிவின்  படிப்படியான பரவல் உற்பத்தித்திறனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு இயக்கத்துக்காக  2024 ஆம் ஆண்டில் ரூ 10,300 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது செயற்கை நுண்ணறிவு அமைப்பை வலுப்படுத்துவதற்கான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.

இந்தியாவின் பெருவணிகத்  துறையின் லாபம் 2024 மற்றும் 2023 நிதியாண்டுக்கு  இடையில் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது என்று பொருளாதார ஆய்வறிக்கை கூறுகிறது.

மூலதனத்தைப் பயன்படுத்துவதற்கும் தொழிலாளர்களைப் பயன்படுத்துவதற்கும் இடையில்> சரியான சமநிலையை ஏற்படுத்த வணிக நிறுவனங்களுக்கு ஒரு கடமை உள்ளது என்று அது குறிப்பிடுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் 

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034952

***

SMB/PKV/DL



(Release ID: 2035398) Visitor Counter : 8