நிதி அமைச்சகம்

2023-24-ல் சமூக சேவைகளுக்கான செலவு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.8% ஆக அதிகரித்துள்ளது

Posted On: 22 JUL 2024 2:50PM by PIB Chennai

சமூக சேவைகளுக்கு செலவிடப்படும் நிதியின் அளவு, 2017-18-ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.7 சதவீதமாக இருந்தது.  இது 2023-24-ம் நிதியாண்டில் 7.8 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அண்மை ஆண்டுகளில் இந்தியாவின் சமூகத்தின்  அமைப்பு முறையின் நிறுவன முன்னேற்றம், அதிகாரமளிக்கும் அணுகுமுறையின் மூலம் எட்டப்பட்டுள்ளது. ஏனெனில் புதிய அணுகுமுறை அரசு திட்டங்களின் அமலாக்கத்திலும் செலவு செயல்திறனை மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது. அடல் ஓய்வூதிய திட்டம் போன்றவற்றின் மூலம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு கடைசி மைல் வரை சேவை வழங்கப்பட்டு வருகிறது.

திட்டங்களின் சிறந்த செயலாக்கத்துடன் கூடிய மேம்பட்ட பொருளாதார உந்துதல் நடவடிக்கை, 2015-16-ம் ஆண்டில் 0.117 ஆக இருந்த பன்முக பரிமாண வறுமைக் குறியீடு, 2019-21-ம் ஆண்டில் 0.066 ஆக குறைந்துள்ளது. இதன் விளைவாக, 2015-16-க்கும் 2019-21-ம் இடைப்பட்ட காலத்தில் 13.5 கோடி இந்தியர்கள் பல பரிமாண வறுமையிலிருந்து மீண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பீகார், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் மிக முக்கியமான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தப் போக்கு கிராமப்புற இந்தியாவால் இயக்கப்படுகிறது. 2015-16-க்கும் 2019-21-க்கும் இடையே 3.43 கோடி மக்கள் பல பரிமாண வறுமையிலிருந்து மீண்டுள்ளனர்.

இதேபோல், கிராமப்புற-நகர்ப்புற இடைவெளி கணிசமாகக் குறைந்துள்ளது, ஏனெனில் கிராமப்புற, நகர்ப்புற மாதாந்தர தனிநபர் நுகர்வு செலவினங்களுக்கு இடையிலான வேறுபாடு 2011-12 ல் 83.9% என்பதில் இருந்து 2022-23-ல் 71.2% ஆக குறைந்துள்ளது.

***

PKV/KV/KR/DL



(Release ID: 2035185) Visitor Counter : 15