நிதி அமைச்சகம்

உலகிலேயே மிகப்பெரியதாக இந்தியாவின் மின் தொகுப்பு

Posted On: 22 JUL 2024 2:23PM by PIB Chennai

இந்தியாவின் மின் பகிர்மானம், ஒரே அலைவரிசையுடன், மாநிலங்களுக்கிடையே மாற்றம் செய்து கொள்ளத்தக்கவகையில் 1,18,740 மெகாவாட் திறனுடன் ஒரே தொகுப்பாக இணைக்கப்பட்டுள்ளது. இது, உலகிலேயே மிகப்பெரிய மின்தொகுப்பாக உருவெடுத்துள்ளது” என மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று அவர் தாக்கல் செய்த 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையில், 2024  மார்ச் 31 வரை, மின் பகிர்மான திட்டங்கள், 4,85,544 சர்க்கியூட் கிலோமீட்டர் அளவுக்கு மின்பகிர்மான வழித்தடங்கள் விரிவுபடுத்தப்பட்டு, 12,51,080 மெகா வோல்ட் ஆம்ப் (எம்விஏ) மின்பகிர்மான திறன் கொண்டதாக உள்ளதென்பது  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2017 அக்டோபரில் சௌபாக்யா திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து  2.86 கோடி வீடுகளுக்கு  மின்இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாட்டில், புதைபடிமம் அல்லாத எரிபொருளின் பங்களிப்பை அதிகரிக்கத் தேவையான முயற்சிகளை நாடு விரைவுபடுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை 2024-2030-க்குள் ரூ.30.5 லட்சம் கோடி முதலீட்டை  இந்தியா ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

பருவநிலை மாற்றத்திற்கான ஐநா மாநாட்டில், 2030-க்குள் இந்தியாவின் மின்சார உற்பத்தியில் புதைமடிமம் அல்லாத எரிபொருள் பயன்பாட்டை 50 சதவீதம் என்ற அளவுக்கு அடைய இந்தியா உறுதியளித்துள்ளது. அதன்படி, புதைபடிமம் அல்லாத எரிபொருட்களைப் பயன்படுத்தி இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தித் திறனை 2030-க்குள் 500 ஜிகா வாட் என்ற அளவுக்கு உயர்த்த மத்திய புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2034916  

---- 

SMB/MM/KPG/KR



(Release ID: 2035016) Visitor Counter : 29