நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தொழில் துறையில் 9.5 சதவீத வளர்ச்சி

Posted On: 22 JUL 2024 2:54PM by PIB Chennai

தொழில் துறையின் வளர்ச்சி 9.5 சதவீதமாக உள்ளது என்று நிதியமைச்சர் தாக்கல் செய்த 2023-24 ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

நாட்டின் தொழில் துறை வளர்ச்சி கடந்த 10 ஆண்டுகளில் 5.2 சதவீத சராசரி வளர்ச்சி விகிதத்துடன் உற்பத்தியில் முன்னிலை வகித்து வருவதாக பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. தொழில் துறையின் நிகர மதிப்பு 2023 ஆம் நிதியாண்டில் 13.4 சதவீதமாகவும், அதே காலகட்டத்தில் உற்பத்தியின் பங்களிப்பு 35.2 சதவீதமாகவும் இருப்பது அனைத்து நிலைகளிலும் தொழில் துறை மேம்பட்டு வருவதை குறிப்பதாக உள்ளது என்று ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 47.5 சதவீத மொத்த உற்பத்தி மதிப்பில் பெரும்பாலான மூலப்பொருட்கள் உள்நாட்டிலிருந்தே பயன்படுத்தப்பட்டதாக அந்த அறிக்கை மேலும் கூறுகிறது. விவசாயம், தொழில், சேவை துறைகளில் அனைத்து உற்பத்தி சார் நடவடிக்கைகளிலும் 50 சதவீதம் உள்நாட்டு பொருட்களே பயன்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

***

(Release ID: 2034939)

SMB/SV/RR/KR


(Release ID: 2035008) Visitor Counter : 90