நிதி அமைச்சகம்

பருவநிலை மாற்றத்திற்கான பரிந்துரைகள் மேற்கத்திய நாடுகளிலிருந்து பெறுவதை விட உள்நாட்டிலிருந்தே விழிப்புணர்வு பெற வேண்டும் – என்பதே மத்திய அரசின் நிலைப்பாடு

Posted On: 22 JUL 2024 2:17PM by PIB Chennai

பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்த ஆய்வில் வளரும் நாடுகள் அது தொடர்பான பிரச்சனைகளுக்கு உள்நாட்டிலேயே தீர்வு காண்பதற்கான வழிமுறைகளை வகுத்துக் கொள்ள வேண்டும் என்பதே 2023-24 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. ஒரே விதமான அணுகுமுறைகள், பருவ நிலை மாற்றத்திற்கான சிக்கல்களுக்கு தீர்வு காண உதவிடாது என்றும், வளரும் நாடுகள் முன்னேற்றத்திற்கான இலக்குடன் கூடிய அர்த்தமுள்ள பருவநிலை மாற்றத்திற்கான நடவடிக்கைகளை சுதந்திரமாக தெரிவு செய்து கொள்ள வேண்டுமென்பதை இந்தப் பொருளாதார ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

2023-24 ஆம் நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கயை மக்களவையில் இன்று சமர்பித்த மத்திய நிதியமைச்சர் மற்றும் பெரு நிறுவனங்கள் விவகாரத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான தற்போதைய உலகளாவிய வழிமுறைகள், பிற நாடுகளுக்கு பொருந்தாத வகையில் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ளார். பேரழிவுகளுக்கு எதிரான மேற்கத்திய நாடுகளின் நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் நாட்டின் கலாச்சாரம், பொருளாதாரம், சமூக நடைமுறைகளில் சீரழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதை உறுதி செய்ய முடியும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பருவ நிலை மாற்றத்தை கட்டுப்படுத்த பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்ட போதும், மேற்கத்திய நாடுகளின் நடைமுறைகளோடு ஒத்துப் போகவில்லை என்ற பெரும்பாலான விமர்சனங்கள் எழுந்துள்ளதை அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீடித்த வளர்ச்சி தொடர்பான வலுவான யோசனைகளை கொண்ட நாட்டின் தனித்துவமிக்க சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகள் குறித்து அறிந்திராத நிலையில் இத்தகைய விமர்சனங்கள் எழுந்துள்ளது.

 

***

(Release ID: 2034914)

AD/SV/RR/KR



(Release ID: 2035002) Visitor Counter : 23