பிரதமர் அலுவலகம்
பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி மறைவுக்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
20 JUL 2024 4:45PM by PIB Chennai
பத்மஸ்ரீ விருது பெற்ற கமலா பூஜாரி மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
விவசாயத்தில், குறிப்பாக இயற்கை வேளாண் நடைமுறைகளை ஊக்குவித்தல், உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றில் அவர் மகத்தான பங்களிப்பை வழங்கி இருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
"திருமதி கமலா பூஜாரி அவர்களின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. விவசாயத்திற்கு அவர் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியுள்ளார். குறிப்பாக இயற்கை விவசாய நடைமுறைகளை ஊக்குவிப்பதிலும் உள்நாட்டு விதைகளைப் பாதுகாப்பதிலும் அவர் அதிக பங்களிப்பை வழங்கி இருக்கிறார். நிலைத்தன்மையை மேம்படுத்துதல், பல்லுயிர்ப் பெருக்கத்தைப் பாதுகாப்பது ஆகியவற்றில் அவரது பணி எப்போதும் நினைவுகூரப்படும். பழங்குடியின சமூகங்களுக்கு அதிகாரம் அளிப்பதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி."
***
PLM/DL
(रिलीज़ आईडी: 2034645)
आगंतुक पटल : 118
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam