பிரதமர் அலுவலகம்
டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியம் எழுதிய ‘Power Within: The Leadership Legacy of Narendra Modi’ என்ற' புத்தகத்தில் பிரதமர் கையெழுத்திட்டார்
Posted On:
17 JUL 2024 8:28PM by PIB Chennai
டாக்டர் ஆர்.பாலசுப்ரமணியத்தை இன்று சந்தித்த பிரதமர் திரு. நரேந்திர மோடி, ‘Power Within: The Leadership Legacy of Narendra Modi’ என்ற புத்தகத்தில் கையெழுத்திட்டார். இந்தப் புத்தகம், பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமைத்துவ பயணத்தை எடுத்துக்காட்டி, அதை மேற்கத்திய மற்றும் இந்திய பார்வையில் விளக்குகிறது. மேலும் பொது சேவை வாழ்க்கையை விரும்புவோருக்கு ஒரு செயல்திட்டத்தை வழங்க அவற்றை ஒன்றிணைக்கிறது.
டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியத்தின் எக்ஸ் சமூக ஊடக தள பதிவிற்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது:
"இன்று காலை டாக்டர் ஆர்.பாலசுப்பிரமணியத்தை சந்தித்தது, மகிழ்ச்சி அளிக்கிறது. அவரது புத்தகத்தின் பிரதியிலும் கையெழுத்திட்டேன். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு எனது நல்வாழ்த்துகள்.”
VL/BR/KR
***
(Release ID: 2033942)
Visitor Counter : 59
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam