பிரதமர் அலுவலகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பிரதமர் மோடியின் உரை
கூட்டத்தின் கருப்பொருள்: பன்முக உரையாடலை வலுப்படுத்துதல்- நீடித்த அமைதி, வளர்ச்சிக்கான முயற்சி
Posted On:
04 JUL 2024 6:04PM by PIB Chennai
உச்சி மாநாட்டில் நேரிடையாக கலந்துகொண்ட வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் பிரதமரின் உரையை வாசித்தார்.
உலகில் தற்போது புவிசார் அரசியல் பதற்றம், புவிசார் பொருளாதார தாக்கம், புவிசார் தொழில்நுட்ப மேம்பாடு ஆகியவை நிகழ்ந்து வருகிறது. இவை அனைத்தும் பல்வேறு தாக்கங்களைத் கொண்டுள்ளன. நாம் முன்னோக்கிப் பார்க்கும்போது, உடனடியான சவால்கள், வாய்ப்புகள் ஆகியவற்றை நாம் எதிர்கொண்டாலும், உலக நிகழ்வுகள் உண்மையான பன்முகத்தன்மையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதுபோன்ற சூழ்நிலையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மட்டுமே, மேலும் முக்கியத்துவம் பெறும். ஆனால், நமக்கிடையே எவ்வாறு ஒத்துழைப்பு உருவாகிறது என்பதைப் பொறுத்தே அதன் மதிப்பு இருக்கும். இதுகுறித்த விவாதத்தை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் நாம் ஏற்கனவே விவாதித்திருக்கிறோம்.
சவால்கள் குறித்து பேசும் போது, தீவிரவாதம் குறித்த பேச்சுகள் நம்மிடையே கண்டிப்பாக முதன்மையானதாக இடம்பெறும். உண்மை என்னவென்றால், இது சீர்குலைப்பதற்கான கருவியாக நாடுகளினால் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது உண்மையாகும். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்த சொந்த அனுபவங்கள் எங்களுக்கு உள்ளன. தீவிரவாதத்தை எந்த வடிவத்தில் வெளிப்படுத்துவதையும் நியாயப்படுத்த முடியாது என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிப்பது கடுமையாக கண்டிக்கப்பட வேண்டும். எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு உரிய தீர்வு தேவைப்படுகிறது. தீவிரவாதத்திற்கு நிதியளித்தல், ஆட்சேர்த்தல் ஆகியவற்றை திறம்பட எதிர்க்க வேண்டும். இந்த உறுதிப்பாட்டில் இருந்து ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு ஒருபோதும் பின்வாங்கக் கூடாது. இந்த விவகாரத்தில் நாம் இரட்டை நிலையைக் கொண்டிருக்க முடியாது.
புவிசார் பொருளாதாரம் என்ற நிலையில் பன்முகப்பட்ட, நம்பத்தகுந்த, நெகிழ்திறன் உடைய விநியோக அமைப்பை உருவாக்குவதே காலத்தின் தேவையாகும். கொவிட் அனுபவத்திலிருந்து இதைப் பெறுவது முக்கியமாகும். மேக் ன் இந்தியா திட்டம், உலகளாவிய வளர்ச்சிக்கான எந்திரமாகவும், உலகளாவியப் பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்தவும் உதவும். திறன் மேம்பாட்டில் மற்ற நாடுகளுடன் குறிப்பாக, உலகளாவிய தெற்கு நாடுகளுடன் இணைந்து செயல்பட இந்தியா விரும்புகிறது.
நமது காலங்களில் தொழில்நுட்பம் சிறந்த ஒன்றாகத் திகழ்வது மட்டுமின்றி, வளர்ச்சி, பாதுகாப்பு ஆகிய இரண்டிலும் மாற்றத்தை அதிகரித்து வருகிறது. டிஜிட்டல் யுகம் மேலும் நம்பகத்தன்மைக் கொண்டதாகவும், வெளிப்படைத் தன்மையுடைதாகவும் இருக்கவேண்டியது அவசியமாகும். செயற்கை நுண்ணறிவு, சைபர் பாதுகாப்பு ஆகியவை அதன் முக்கிய பிரச்சனைகளை எழுப்புகின்றன. அதே நேரத்தில், இந்தியா டிஜிட்டல் பொது கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதார உள்ளடக்கம் ஆகியவை பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். நமது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைமைத்துவத்தில் இந்த இரண்டு துறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பினர்கள், தொடர்புடையவர்களைக் கொண்ட சர்வதேச ஒத்துழைப்புக்கான வாய்ப்பையும் அவை விரிவுபடுத்துகிறது.
சவால்களை எதிர்கொள்ள உறுதியாக நிற்கும் அதே அளவிற்கு முன்னேற்றத்தின் பாதைகளைத் தீவிரமாகவும் கூட்டாகவும் கண்டறிவதும் முக்கியமானதாகும். உலகிற்கு சிறப்பான சேவையாற்றும் என்ற வகையில், புதிய போக்குவரத்துத் தொடர்புகளை உருவாக்குவது தற்போது உலகளாவிய விவாதமாக உள்ளது. இது தீவிரமாக நடத்தப்பட வேண்டும் என்பதற்குப் பல கூட்டு முயற்சிகள் தேவைப்படுகின்றன. இது அரசுகளின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவற்றுக்கு மதிப்பளிப்பதாகவும் இருக்க வேண்டும். மேலும், பாகுபாடு இல்லாத வர்த்தகம், அண்டை நாடுகளுக்கு மாற்றுவதற்கான உரிமைகள் ஆகியவற்றின் அடித்தளத்திலும் இது கட்டமைக்கப்பட வேண்டும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு விரிவடைந்த குடும்பம் என்ற முறையில், இந்தியா – ஈரான் இடையே, சபஹார் துறைமுகத்திற்காக நீண்டகால உடன்பாடு ஒன்றை அண்மையில் நாங்கள் எட்டியிருக்கிறோம். இது நிலத்தால் சூழப்பட்ட மத்திய ஆசியப் பகுதிக்கு மகத்தான மதிப்பைத் தருவது மட்டுமின்றி இந்தியா-யுரேஷியா இடையேயான வர்த்தகத் தடைகளையும் அகற்றும்.
பிராந்தியத்தைப் பொறுத்தவரை ஆப்கானிஸ்தான் பற்றி நான் பேசுகிறேன். எங்கள் மக்களுக்கு இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவு எங்களின் பிணைப்புக்கு அடித்தளமாக உள்ளது. எங்களின் ஒத்துழைப்பு, திட்டங்கள் மேம்பாடு, மனிதாபிமான உதவி, திறன் கட்டமைப்பு, விளையாட்டுகளை உள்ளடக்கியதாகும். ஆப்கன் மக்களின் தேவைகளையும் விருப்பங்களையும் இந்தியா உணர்ந்துள்ளது.
தற்போதைய சர்வதேச ஒழுங்கினை சீர்திருத்த, குடும்ப நிலையில் அனைத்தையும் பகிர்ந்து கொள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு . உறுதி பூண்டுள்ளது. ஐநா சபை, அதன் பாதுகாப்பு சபை ஆகியவற்றுக்கு இந்த முயற்சி நீடிக்கும் போது மட்டுமே இது சாத்தியமாகும். வெகுவிரைவில் இது குறித்து பொதுக் கருத்து உருவாகும் என்று நாங்கள் நம்புகிறோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொருளாதாரத் திட்டத்தை விரிவுபடுத்த இந்தியா குறிப்பிடத்தக்க அளவு பங்களிப்பு செய்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கான ஸ்டார்ட் அப் அமைப்பு, ஸ்டார்ட் அப், புதிய கண்டுபிடிப்பு ஆகியவற்றுக்கான சிறப்புப் பணிக்குழு போன்றவற்றை நாங்கள் நிறுவனமயமாக்கியுள்ளோம். 100 யுனிகார்ன்கள் உட்பட இந்தியாவின் 1,30,000 புத்தொழில் நிறுவனங்கள் மூலமான எங்களின் அனுபவம் மற்றவர்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.
மருத்துவம், ஆரோக்கிய சுற்றுலாப் பற்றிக் குறிப்பிடும் போது, உலக சுகாதார நிறுவனம் குஜராத்தில் உலகளாவிய பாரம்பரிய மருத்துவ மையத்தை அமைத்திருப்பதை நீங்கள் அறிவீர்கள்.
கல்வி விரிவாக்கம், பயிற்சி, திறன் கட்டமைப்பு ஆகியவை இந்தியாவின் சர்வதேச ஒத்துழைப்புக்கான முக்கியத் தூண்களாகும். சி-5 பங்குதாரர்களாக இருப்பினும், அண்டை நாடுகள் முதலில் என்பதாக இருப்பினும் அண்டை நாடுகளுக்கு உதவி செய்வதாக இருப்பினும் இவற்றின் மீது மேலும் கட்டுமானம் செய்வதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் இணைவதற்குப் பார்வையாளர்களாக அல்லது பேச்சுவார்த்தை பங்குதாரர்களாக மேலும் பல நாடுகள் விரும்பும் நிலையில், நமது பொதுக்கருத்தை சிறந்த முறையிலும் ஆழமாகவும் தெரிவிக்க நாம் பாடுபட வேண்டும். ஆங்கிலத்திற்கு மூன்றாவது அலுவல் மொழி தகுதி அளிப்பது முக்கியமானதாகும்.
வெற்றிகரமான உச்சிமாநாட்டை நடத்துவதற்காக கஜக்ஸ்தானை நாங்கள் பாராட்டுகிறோம். விஸ்வ பந்து அல்லது உலகின் நண்பன் என்ற முறையில், இந்தியா அதன் அனைத்துப் பங்குதாரர்களிடம் ஆழமான ஒத்துழைப்புக்கு எப்போதும் பாடுபடும். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கு வரவிருக்கும் சீனத் தலைமைத்துவம் வெற்றிகரமாக அமைவதற்கும் எங்களின் நல்வாழ்த்துகளை உரித்தாக்குகிறோம்.
----
SMB/IR/KPG/RS/DL
(Release ID: 2030861)
Visitor Counter : 67
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam