பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள நெதர்லாந்து பிரதமருக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

Posted On: 02 JUL 2024 8:22PM by PIB Chennai

நெதர்லாந்தின் புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ள டிக் ஷூஃபுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை, வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை மேலும் மேம்படுத்துவதை  எதிர்நோக்குவதாக  திரு  மோடி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

"நெதர்லாந்து பிரதமராக பொறுப்பேற்றுள்ள டிக் ஷூஃபுக்கு வாழ்த்துகள். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மேலாண்மை, விவசாயம், போக்குவரத்து, புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியா-நெதர்லாந்து கூட்டாண்மையை மேம்படுத்த நெருக்கமாக பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன். @MinPres"

-----

SMB/KPG

 


(Release ID: 2030312) Visitor Counter : 81