பிரதமர் அலுவலகம்
ஹூல் தினத்தை முன்னிட்டு பழங்குடியின வீரர்களுக்கு பிரதமர் அஞ்சலி
प्रविष्टि तिथि:
30 JUN 2024 2:32PM by PIB Chennai
சித்து-கன்ஹு, சந்த்-பைரவ் மற்றும் பூலோ-ஜனோ போன்ற பழங்குடியின வீரர்களின் சுயமரியாதை மற்றும் அவர்கள் பிரிட்டிஷ் பேரரசின் அட்டூழியங்களுக்கு எதிராக வீரத்துடன் போராடியதற்காகப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார். நமது பழங்குடியின சமுதாயத்தின் ஈடு இணையற்ற துணிச்சல், போராட்ட குணம் மற்றும் தியாகத்தை நினைவுகூர சிறந்த தருணம் ஹூல் தினம் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு;
"ஹூல் தினம் என்பது நமது பழங்குடி சமூகத்தின் நிகரற்ற தைரியம், போராட்ட குணம் மற்றும் தியாகத்தை நினைவு கூர அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிறந்த சந்தர்ப்பமாகும். இந்த நன்னாளில், சிதோ-கன்ஹு, சந்த்-பைரவ், பூலோ-ஜானோ போன்ற பழங்குடி வீரர்களுக்கு எனது மரியாதைக்குரிய அஞ்சலிகள். பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கொடுங்கோன்மைக்கு எதிராக அவர்கள் காட்டிய எதிர்ப்பு, சுயமரியாதை மற்றும் வீரம் குறித்த தகவல்கள் நாட்டு மக்களுக்கு எப்போதும் உத்வேகம் அளிக்கும் ஆதாரமாக இருக்கும்."
***
AD/PLM/KV
(रिलीज़ आईडी: 2029725)
आगंतुक पटल : 116
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Assamese
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Hindi_MP
,
Marathi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam