பிரதமர் அலுவலகம்

டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார்

Posted On: 30 JUN 2024 2:06PM by PIB Chennai

ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணிக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (30-06-2024) தொலைபேசி மூலம் வாழ்த்துத் தெரிவித்தார். போட்டியில் அணி வீரர்கள் வெளிப்படுத்திய திறன்களையும் அவர்களது சிறந்த உணர்வையும் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"டி20 உலகக் கோப்பையில் இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தேன். அவர்கள் இந்தப் போட்டி முழுவதும் சிறந்த திறமையையும் உத்வேகத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர். ஒவ்வொரு வீரரின் அர்ப்பணிப்பும் மிகவும் ஊக்கமளிக்கிறது.

அணியின் தலைவர் ரோஹித் சர்மா, மூத்த பேட்ஸ்மேன் விராட் கோலி, அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஆகியோர் குறித்தும் பிரதமர் தனித்தனியாகப் பதிவிட்டுள்ளார். அவர்களின் சிறந்த செயல்திறன் மற்றும் அர்ப்பணிப்பை அவர் அதில் பாராட்டியுள்ளார்.

ரோஹித் சர்மா குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"அன்புள்ள ரோஹித் சர்மா @ImRo45,

நீங்கள் சிறந்த ஆளுமை. உங்களின் உற்சாகமான மனநிலை, பேட்டிங் மற்றும் தலைமைத்துவம் இந்திய அணிக்கு புதிய பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. உங்கள் டி20 வெற்றி எப்போதும் நினைவுகூரப்படும். இன்று உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி.

விராட் கோலி குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

"அன்புள்ள விராட் கோலி @imVkohli,

உங்களுடன் பேசியதில் மகிழ்ச்சி. இறுதிப் போட்டியில் அற்புதமாக பேட்டிங் செய்தீர்கள். நீங்கள் விளையாட்டின் அனைத்து வடிவங்களிலும் பிரகாசித்துள்ளீர்கள். புதிய தலைமுறை வீரர்களை நீங்கள் தொடர்ந்து ஊக்குவிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்.

 

ராகுல் டிராவிட் குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள பதிவு:

ராகுல் டிராவிட்டின் திறமையான பயிற்சியாளர் பயணம் இந்திய கிரிக்கெட்டின் வெற்றியை வலுப்படுத்தியுள்ளது.

அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு, நுண்ணறிவு மற்றும் திறமையை ஊக்குவிப்பது ஆகிய பண்புகள் அணியை மேலும் சிறப்பாக்கியுள்ளன.

அவரது சிறந்த பங்களிப்புகளுக்காகவும், அடுத்த தலைமுறைகளை ஊக்குவிப்பதற்காகவும் இந்தியா அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. அவரை வாழ்த்தியதில் மகிழ்ச்சி"

***

ANU/AD/PLM/KV

 

 



(Release ID: 2029723) Visitor Counter : 15