மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

"தேசிய தடயவியல் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

प्रविष्टि तिथि: 19 JUN 2024 8:05PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (19.06.2024) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 2024-25-ம் ஆண்டு  முதல் 2028-29-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.2254.43 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் சார்பில் "தேசிய தடய அறிவியல் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட அம்சங்களை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:

i. நாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகங்களை உருவாக்குதல்.

ii. நாட்டில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நிறுவுதல்.

iii. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தில்லி வளாகத்தில் தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துதல். 

ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திறன் வாய்ந்த தடய அறிவியல் நடைமுறைகள் மூலம்  குற்றவாளிகளை கண்டறிந்து வலுவான நீதி அமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. விஞ்ஞான ரீதியான தடயவியல் பரிசோதனையில் உயர்தர செயல்முறை, பயிற்சி பெற்ற தடயவியல் நிபுணர்களை அதிகரித்தல் போன்றவையும் இத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2026704

****

AD/PLM/KPG/DL


(रिलीज़ आईडी: 2026755) आगंतुक पटल : 147
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam