பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே இங்கிலாந்து பிரதமருடன் பிரதமர் சந்திப்பு

प्रविष्टि तिथि: 14 JUN 2024 5:11PM by PIB Chennai

இத்தாலியின் அபுலியா நகரில் நடைபெற்று வரும் ஜி-7 உச்சிமாநாட்டிற்கு இடையே, இங்கிலாந்து பிரதமர் திரு ரிஷி சுனக்குடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (14.06.2024) இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வகையில் இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்றுள்ள திரு நரேந்திர மோடிக்கு இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் வாழ்த்துத் தெரிவித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

2030 ஆம் ஆண்டை நோக்கிய செயல்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து விவாதித்த அவர்கள், வழக்கமான உயர்நிலை அரசியல் ஆலோசனைகள், ராணுவம் மற்றும் பாதுகாப்பு விவகாரங்கள், வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு, உயர் தொழில்நுட்பத் துறைகள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகள் உள்ளிட்டவை குறித்தும் இந்த அம்சங்களில் இருதரப்பு ஒத்துழைப்பில் முன்னேற்றம் குறித்தும் ஆலோசனை நடத்தினர். இரு நாடுகளுக்கும் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் சர்வதேச விஷயங்கள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

 

அடுத்த மாதம் இங்கிலாந்தில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு தயாராகி வரும் அந்நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

***

AD/PLM/AG/KV

 

 


(रिलीज़ आईडी: 2025323) आगंतुक पटल : 125
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , Malayalam , Kannada , English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu