நிதி அமைச்சகம்
மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் துறை அமைச்சராக திருமதி நிர்மலா சீதாராமன் பொறுப்பேற்றார்
Posted On:
12 JUN 2024 10:14AM by PIB Chennai
மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் துறை அமைச்சராக திருமதி நிர்மலா சீதாராமன் புதுதில்லியில் இன்று பொறுப்பேற்றார்
நார்த் பிளாக்கில் உள்ள அலுவலகத்தில் நிதிச் செயலாளர் டாக்டர் டி.வி.சோமநாதன், நிதி, பெரு நிறுவனங்கள் துறை அமைச்சகத்தின் பிற செயலாளர்கள் திருமதி சீதாராமனை வரவேற்றனர்
மத்திய நிதி, பெரு நிறுவனங்கள் துறை அமைச்சராக மீண்டும் பணியாற்றவும், அவரது வழிகாட்டுதலின் கீழ் இந்தியாவுக்கும், அதன் மக்களுக்கும் சேவை செய்ய தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு அவர் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் வலுவான தலைமை, வளர்ச்சி சார்ந்த நிர்வாகம் ஆகியவை குறித்து திருமதி சீதாராமன் குறிப்பிட்டார்.
தனது குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதை உறுதி செய்வதில் அரசு முழுமையாக உறுதிபூண்டுள்ளது என்றும், இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
2014 –ம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்கள் தொடரும் என்றும், இது இந்தியாவின் பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மையையும், வளர்ச்சியையும் மேலும் ஏற்படுத்தும் என்றும் திருமதி நிர்மலா சீதாராமன் கூறினார். உலகளாவிய சவால்களுக்கு இடையே சமீபத்திய ஆண்டுகளில் இந்தியாவின் பாராட்டத்தக்க வளர்ச்சி குறித்து அவர் எடுத்துரைத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2024501
***
SG/IR/AG/RR
(Release ID: 2024697)
Visitor Counter : 112
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam