கலாசாரத்துறை அமைச்சகம்
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக திரு கஜேந்திர சிங் ஷெகாவாத் பொறுப்பேற்றுக்கொண்டார்
Posted On:
11 JUN 2024 2:31PM by PIB Chennai
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சராக திரு கஜேந்திர சிங் ஷெகாவாத் இன்று பொறுப்பேற்றார். அவரை கலாச்சார அமைச்சகத்தின் செயலாளர் திரு கோவிந்த் மோகன் மற்றும் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு ஷெகாவாத், நமது நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள துடிப்பு மிக்க இந்திய கலாச்சாரத்தை பாதுகாக்கவும், மேம்படுத்தவும் இந்த வாய்ப்பை தமக்கு வழங்கியிருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார்.
காலனி ஆதிக்கத்தைக் கைவிட்டு, நமது புகழ்மிக்க கலாச்சார பாரம்பரியங்களை நிலைநிறுத்துவதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையின் கீழ், இந்தியா என்பதில் இருந்து பாரத் என்பதற்கு மாற்றம் பெற மிகப்பெரும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.
***
(Release ID: 2024007)
SMB/RS/RR
(Release ID: 2024096)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Hindi_MP
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam