பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பணியாளர் நலன், மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சராக டாக்டர் ஜிதேந்திர சிங் பொறுப்பேற்றார்

"பிரதமர் மோடி தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் புரட்சிகர நிர்வாக சீர்திருத்தங்கள் நடந்துள்ளன, இவை இந்தப் பதவிக்காலத்திலும் தொடரும்" என்று அவர் கூறினார்

प्रविष्टि तिथि: 11 JUN 2024 12:14PM by PIB Chennai

மத்திய பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் இணை அமைச்சராக டாக்டர் ஜிதேந்திர சிங், தொடர்ந்து மூன்றாவது முறையாக இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றார். பின்னர் பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையின் கீழ் தொடர்ச்சியாகப் புரட்சிகர நிர்வாக சீர்திருத்தங்கள் நடந்து வருகின்றன என்றும், இவை இந்த ஆட்சிக்காலத்திலும் தொடரும் என்றும் கூறினார்.

பிரதமர் மோடி தம்மீது மீண்டும் நம்பிக்கை வைத்து, தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தப் பொறுப்பை தனக்கு வழங்கியதற்கு டாக்டர் ஜிதேந்திர சிங் நன்றி தெரிவித்தார். டாக்டர் சிங் 2014-ம் ஆண்டு முதல் இந்தத் துறைக்குப் பொறுப்பு வகித்து வருகிறார். இவர் உதம்பூர் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர் ஆவார்.

***

(Release ID: 2023940)

SMB/IR/AG/RR


(रिलीज़ आईडी: 2024067) आगंतुक पटल : 107
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , Kannada , English , Manipuri , Urdu , Hindi_MP , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Malayalam