பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் திரு நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ஆர்மீனியா பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 06 JUN 2024 8:58PM by PIB Chennai

ஆர்மீனியா பிரதமர் மேதகு திரு நிக்கோல் பாஷின்யன், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு சமீபத்தில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக வாழ்த்து தெரிவித்தார்.

பிரதமர் திரு பாஷின்யனுக்கு நன்றி தெரிவித்த பிரதமர், அனைத்துத் துறைகளிலும் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பு வளர்ந்து வருவதை சுட்டிக்காட்டினார்.

இந்தியா-ஆர்மீனியா இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முக்கியத்துவம் அளிப்பது  என்ற தங்களது உறுதிப்பாட்டை இரு தலைவர்களும் மீண்டும் உறுதி செய்தனர்.

***

(Release ID: 2023324)

SMB/BR/RR


(रिलीज़ आईडी: 2023386) आगंतुक पटल : 102
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Odia , English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam