தேர்தல் ஆணையம்
azadi ka amrit mahotsav

6-ம் கட்ட தேர்தல் - இரவு 11.45 மணி நிலவரப்படி 61.20% வாக்குப் பதிவு

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAY 2024 11:59PM by PIB Chennai

பொதுத்தேர்தலின் ஆறாம் கட்டத் தேர்தலில்  இரவு 11.45 மணி நிலவரப்படி 61.20% வாக்குகள் பதிவாகியுள்ளன. முந்தைய கட்டங்களில் இருந்ததைப் போலவே, வாக்குச்சாவடி வாரியாக, விடிஆர் பயன்பாட்டில் நேரலையில் கிடைக்கும் என்பதால் கள அளவிலான அதிகாரிகளால் இது தொடர்ந்து புதுப்பிக்கப்படும்.
இரவு 11:45 மணிக்கு மாநில வாரியான தோராய வாக்குப்பதிவு விவரம் பின்வருமாறு:
பீகார் -08 தொகுதிகள் - 55.24% ,  ஹரியானா- 10 தொகுதிகள்- 60.4%, ஜம்மு காஷ்மீர்- 1 தொகுதி- 54.30%, ஜார்கண்ட்- 04 தொகுதிகள்- 63.76% , தில்லி  - 07 தொகுதிகள் - 57.67 % , ஒடிசா-  06 தொகுதிகள்- 69.56%, உத்தரப் பிரதேசம்- 14 தொகுதிகள் -54.03%,  மேற்கு வங்காளம்- 08 தொகுதிகள் - 79.47 %,
8 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் -  58 தொகுதிகள்- 61.2%
இங்கு காட்டப்படும் தரவுகள் கள அலுவலரால் கணினிகளில் நிரப்பப்படும் தகவல்களின்படி உள்ளன. இது ஒரு தோராயமான தரவாகும்.  ஏனெனில் சில வாக்குச் சாவடிகளின்  தரவு தெரிவதற்கு நேரம் எடுக்கும். மேலும் இந்தத் தரவு  அஞ்சல் வாக்குச்சீட்டை உள்ளடக்காது. ஒவ்வொரு  வாக்குச்  சாவடிக்கும்  பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் இறுதி உண்மையான கணக்கு படிவம் 17 C இல் வாக்குப்பதிவு முடிவில் அனைத்து வாக்குச்சாவடி முகவர்களுடனும் பகிரப்படுகிறது.

***

ANU/AD/PKV/KV 


(வெளியீட்டு அடையாள எண்: 2021697) வருகையாளர் எண்ணிக்கை : 151
இந்த வெளியீட்டை படிக்க: Kannada , English , Urdu , हिन्दी , Hindi_MP , Marathi , Assamese , Punjabi , Gujarati